யாரும் எங்களை தடுக்கவில்லை.. சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த 2 பெண்கள்.. யார் இவர்கள்?
இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த இரண்டு பெண்கள் யார் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த இரண்டு பெண்கள் யார் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் இன்று அதிகாலை நுழைந்து தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் கோவிலுக்குள் சென்றது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்த வீடியோக்களும் வெளியாகி உள்ளது. ஆனால் தரிசனம் குறித்து கோவில் நிர்வாகமோ, அரசோ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

இரண்டு பேர்
அந்த இரண்டு பெண்களின் விவரமும் தற்போது வெளியாகி உள்ளது. ஒருவர் மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண். இன்னொருவர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண். இவர்கள் இருவரும்தான் இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

என்ன செய்கிறார்கள்
பிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஆவார். இவர் கோழிக்கோடு அரசியல்வாதிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. கனகதுர்கா நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றுகிறார். சமூக செயற்பாட்டாளரான இவர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்.

என்ன சொல்கிறார்கள்
இதுகுறித்து பேட்டியளித்த அந்த பெண்கள் இரண்டு பேரும் ''நாங்கள் பம்பாவிற்கு இரவு 12 மணிக்கு சென்றோம். அங்கிருந்து போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கோவிலை நோக்கி சென்றோம். போராட்டக்காரர்கள் அப்போது அங்கு இல்லை. பக்தர்கள் இருந்தனர். ஆனால் யாரும் எங்களை தடுக்கவில்லை. யாரும் எங்களை நிறுத்தவில்லை. நாங்கள் கோவிலில் வழிபட்டோம்'' என்று கூறி இருக்கிறார்கள்.
|
ஏற்கனவே இவர்கள் சென்றனர்
இவர்கள் இருவரும் ஏற்கனவே சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்று இருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 24ம் தேதி இவர்கள் சபரிமலைக்கு கோவிலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அப்போது இவர்கள் போராட்டக்காரர்களால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications