சபரிமலைக்கு போறீங்களா? இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும்: தேவசம்போர்டு
திருவனந்தபுரம்: ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேர்களும் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்திருக்கிறது.. அதேபோல, சபரிமலை வரும் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை திருவிதாங்கூர் தேவசம் போர்டு விடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கமாகும்.. இந்த பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம் போர்டு மேற்கொண்டு வருகிறது.

மண்டல பூஜை: அந்தவகையில், இந்த வருடத்துக்கான மண்டல பூஜை வரும் டிசம்பர் 26-ந்தேதி நடைபெறுகிறது.. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.. எனவே, பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலில் அவர்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவும், சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன.
அதன்படி "ஆன்லைன்" முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர்களும், "ஸ்பாட் புக்கிங்" மூலம் 10 ஆயிரம் பேர்களும் என மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தினமும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஸ்பாட் புக்கிங்: இதில், ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்களுக்கு பம்பை, எருமேலி, பர்மேடு ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.. இதில் பக்தர்களின் விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் 'கியூ-ஆர் கோர்டு' மற்றும் போட்டோ அடங்கிய பாஸ் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்ய முடியாமல் ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்கள், கட்டாயமாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
அதேபோல, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இந்த கவுண்டர்களின் எண்ணிக்கையும் 6 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பக்தர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது..
தேங்காய் : நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை இருமுடி கட்டில் வைத்து பக்தர்கள் தலையில் ஏந்தி வருவார்கள். இதில் மீதமாகும் சாம்பிராணி, பன்னீர், கற்பூரம், மஞ்சள் போன்ற பொருள்கள் மாளிகைப்புறம் கோவில் அருகே பக்தர்கள் விட்டு சென்றுவிடுகிறார்களாம்.
இவற்றை பூஜைக்கும் பயன்படுத்த முடியாது என்பதால், பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே தந்திரி, மேல் சாந்தி போன்றோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனாலும், பக்தர்கள் இந்த தொடர்ந்து எடுத்து வருவதுடன், மாளிகைப்புறம் அருகே போட்டுவிடுகிறார்களாம்.. இந்த பொருட்களை, கனரக இயந்திரங்கள் மூலம் எடுத்துச்சென்று, காட்டுப்பகுதியில் எரிக்கப்படுகின்றன.
வேண்டுகோள்: அதனால், மீண்டும் தேவசம் போர்டு பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.. அதன்படி, இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்ல, கற்பூரம், சாம்பிராணி போன்றவை பூஜை பொருட்களாக இருந்தாலும், தீ ஆபத்தை கருத்தில் கொண்டு அவற்றை எரிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications