சாம்பிளுக்கு போன "பழம் தின்னும் வவ்வால்".. சிறுவனின் உயிரை பறித்த நிபா வைரஸ்.. வௌவால்கள் தந்த உதறல்
திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பாதிப்பால் கேரளா மக்களே கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. 14 வயது சிறுவன் நிபா வைரஸுக்கு பலியான நிலையில், பொதுமக்களுக்கு மேலும் கலக்கம் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன?
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்குதல் அதிகரித்தவாறே இருந்தது.. கடந்த 2018ல் நிபா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை இந்த வைரஸ் காவு வாங்கியது.. முதன்முதலில் நிபா பாதித்து 3 பேர் ஒரே வீட்டில் உயிரிழந்தது ஒட்டுமொத்த மக்களையும் அதிர செய்தது.

இதற்கு பிறகுதான், இறந்தவர்களின் வீட்டு கிணற்றில் வெளவால்கள் கூட்டமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது... வெளவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் மனிதர்களின் தொடர்பு மூலமும் பரவக்கூடியது.. இதையடுத்து, அதே காலகட்டத்தில் மொத்தம் 17 பேர் மரணமடைந்தனர்.
கோழிக்கோடு: கடந்த 2023ல், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் 2வது முறையாகப் பரவியது.. அப்போதும் 2 பேர் உயிரிழந்தனர்.. இதற்கு பிறகு, மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலப்புறம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், ஆனக்கயம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த மாதம் 10-ம் தேதி திடீரென காய்ச்சல் வந்துள்ளது.. மருத்துவமனைகளில் எங்கும் அனுமதிக்கப்படாமல், வெறுமனே மருந்து வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறான் இந்த சிறுவன்.
நிபா வைரஸ்: ஆனாலும் காய்ச்சல் குறையவேயில்லை.. இதற்கு பிறகுதான், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து டெஸ்ட் செய்யப்பட்டபோது, சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. உடனடியாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டது.. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தபோதும, கடந்த மாதம் 21-ம் தேதி சிறுவன் இறந்துவிட்டான்.
இந்த சிறுவன் மிகச்சிறந்த ஃபுட்பால் பிளேயராம்.. இவரது சக மாணவர்கள், டியூஷனில் உள்ளவர்கள், இவருடன் பஸ்ஸில் சென்றவர்கள் என ரூட் மேப் மூலம் கண்டறியப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதில் ஒருசிலர் மட்டும் கண்காணிப்பில் இப்போது உள்ளனர்.
வௌவால்கள்: வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. வெளவால்கள் சாப்பிட்ட பழங்கள் போன்றவற்றாலும், வைரஸ் பரவுமாம். தலைவலி, ஜன்னி, இருமல், மூச்சுத்திணறல் போன்றவையெல்லாம் நிபா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள்தான்.. எனவே, வெளவால்கள் கடித்த பழங்களை சாப்பிட கூடாது என்று அறிவுறுத்தியபடியே உள்ளனர்.
14 வயது சிறுவனின் மரணம் குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சொல்லும்போது, "நிபா வைரஸ் பாதித்த சிறுவனின் வீடு பாண்டிக்காடு பகுதியை சுற்றிலும் , 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வெளவால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன... பழம் தின்னும் 27 வெளவால்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கும் அனுப்பப்பட்டன. சோதனை முடிவில் 6 வௌவால்களின் சாம்பிள்களில் நிபா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நெகட்டிவ் ரிப்போர்ட்: வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் சிறுவனுக்குப் பரவியிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுவனின் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். சிறுவனுடன் தொடர்பு பட்டியலில் இருந்தவர்களுக்கு நிபா நெறிமுறையின்படி, சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது" என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications