லோயர் பெர்த் -தில் யாருங்க இது? ஸ்லீப்பர் கோச் ரயிலில், ஏசி பஸ்களில் எல்லைமீறும் பாலியல் சேட்டைகள்
திருவனந்தபுரம்: ரிசர்வ் செய்யப்பட்ட ரயிலில் மீண்டும் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. நாளுக்கு நாள் பெண் பயணிகள் மீதான வன்முறைகள் அதிகரித்தபடியே உள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.
சமீபகாலமாகவே ஓடும் ரயில்களிலும், பஸ்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது.. பாலியல் அத்துமீறல்களும், அட்டகாசங்களும் பெருகி கொண்டே வருகின்றன.

கடந்த மாதம், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், பாமுருவுக்கு, தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நிர்மலிலிருந்து, ஐதராபாத் வழியாக ஏசி பஸ்ஸில் 27 வயது பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது.
ஏசி பஸ்: நள்ளிரவு 12 மணியை தாண்டியதும், 2வது டிரைவர் கிருஷ்ணா என்பவர், ஸ்லீப்பர் கோச்சுக்கு சென்று, மகளுடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்..
அந்த பெண் கத்தி கூச்சலிட கூடாது என்பதற்காக அவரது வாயில் போர்வையை திணித்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் கிருஷ்ணா. அதிர்ச்சியிலிருந்து மீண்ட அந்த பெண்ணோ, உடனடியாக 100க்கு போன் செய்து போலீசாரிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், கிருஷ்ணா அதற்கு முன்னாடியே ஓடும் பஸ்ஸிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
17 வயது சிறுமி: அதேபோல, கடந்த வாரம், உத்தரகாண்டில், 17 வயது சிறுமியை அந்த பஸ்ஸின் டிரைவரும், கண்டக்டரும் பலமுறை பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.. கூட்டம் குறைவாக இருந்ததை பயன்படுத்தி, இருவரும் பஸ்ஸுக்குள்ளேயே வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பிறகு, கேஷ் கவுண்டரில் டிக்கெட் பணத்தை ஒப்படைத்தபோது நடந்த சம்பவத்தை கேஷியரிடம் சொல்லியிருக்கிறார் கண்டக்டர். உடனே கேஷியரும் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். அதற்கு பிறகு 2 பேர் என மொத்தம் 5 பேரால் ஒரே இரவில் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ் ஸ்டாண்டில் பித்து பிடித்ததுபோல உட்கார்ந்திருந்தாராம் அந்த சிறுமி.
இந்த கொடுமை ஓடும் ரயிலிலும் தொடர்கிறது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு, 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் ஆபாச வீடியோக்களைப் பார்க்க காட்டி கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மத்தியப்பிரதேச மாநிலம், இடார்சி-போபால் செல்லும் மங்களா எக்ஸ்பிரஸின் AC கோச்சில்தான், இந்த கொடுமை நடந்துள்ளது. இதோ இப்போதும் ஒரு அக்கிரமம் சென்னைக்கு வந்த ரயிலில் நடந்துள்ளது.
ஐடி பெண் ஊழியர்: கேரளாவில் இருந்து சென்னை செண்ட்ரலுக்கு 3 நாட்களுக்கு முன்பு விரைவு ரெயில் ஒன்று சென்றது. ரெயிலில் முன்பதிவு பெட்டியில் I.T பெண் ஊழியர் ஒருவர் பயணம் செய்திருக்கிறர்.. அதிகாலை 2 மணியளவில் ரெயில் காட்பாடிக்கு வந்தபோது, ரிசர்வேஷன் பெட்டியில் இளைஞர் ஒருவர் ஏறியிருக்கிறார்.. சிறிது நேரத்திலேயே ஐ.டி. பெணி ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த அந்த பெண் அளித்த புகாரின்பேரில், ரெயில்வே போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.
பெண் பயணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு, தப்பியோடிய குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் தங்கியிருந்த கிஷோர் என்ற இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அதிரடி விசாரணை: தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாராம் கிஷோர்.. ஈரோட்டில் இருந்து சென்னை செல்வதற்காக காத்திருந்தபோது ரெயிலை தவறவிட்டுள்ளார். அதனால், பழனி எக்ஸ்பிர ரெயிலில் ரிசர்வேஷன் செய்துவிட்டு ஏறியிருக்கிறார். அப்போதுதான், ஐ.டி. பெண் ஊழியரை பார்த்ததுமே சபலம் வந்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கிஷோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் பொதுப்போக்குவரத்திலேயே இத்தனை அத்துமீறல்களும், அட்டகாசங்களும் பெருகிவரும்நிலையில், பெண்களுக்கான பாதுகாப்புகள் குறைந்து கொண்டேவருவது கலக்கத்தை தருகிறது..!!!












Click it and Unblock the Notifications