திருவனந்தபுரம்- கண்ணனூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை.. என்ன கலர் தெரியுமா? சிறப்பம்சங்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் திருவனந்தபுரம்- கண்ணூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல் ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.

 Do you know when will Vande Bharat from Thiruvananthpuram - Kannur starts?

ரயிலில் ஆட்டோமேட்டிக் டோர்ஸ், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. இவை சென்னையில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியா முழுவதும் சுமார் 14 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதல் சேவை டெல்லி- வாரணாசி வழித்தடத்தில் தொடங்கியது. அது போல் அடுத்தது டெல்லி முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா வரை சென்றது. இந்த ரயிலின் மூன்றாவது சேவை மும்பை முதல் காந்திநகர் வரை இயக்கப்படுகிறது. நான்காவது சேவை டெல்லி முதல் ஆம் ஆந்தௌரா வரை செல்கிறது.

அது போல் 5ஆவது சேவை சென்னை முதல் மைசூர் வரை இயக்கப்படுகிறது. 6ஆவது சேவை பிலாஸ்பூர் முதல் நாக்பூர் வரையும் 7ஆவது சேவை ஹவுரா முதல் புதிய ஜல்பைகுரி வரையிலும்8ஆவது சேவை விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத் வரையும் 9ஆவது சேவை மும்பை முதல் சோலாபூர் வரையும் இயக்கப்படுகிறது.

அது போல் 10 ஆவது சேவை மும்பை முதல் ஷீரடி வரையும் 11 ஆவது சேவை அஜ்மீர் முதல் டெல்லி வரையும் 12 ஆவது சேவை சென்னை முதல் கோவை வரையும் இயக்கப்படுகிறது. 15ஆவது சேவையாக திருவனந்தபுரம்- காசர்கோடு வரை இயக்கப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் ரயில் 18 என அழைக்கப்படுகிறது. இவை இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அது போல் இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும்.

இதில் 14 ஏசி சேர்களும் இரு எக்ஸிகியூட்டிவ் சேர் கோச்சுகளும் உள்ளன. ஏசி சேர் கோச்சுகள் அக்குவா நிறத்திலும் ஏசி எக்ஸிகியூட்டிவ் சேர்கள் பிங்க் நிறத்திலும் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் இந்தியாவின் 15 ஆவது சூப்பர்ஃபாஸ்ட் ரயிலாகும். இந்த ரயில் கேரளாவின் முதல் நீல நிற மற்றும் வெள்ளை நிறத்தினாலான ரயிலாகும்.

 Do you know when will Vande Bharat from Thiruvananthpuram - Kannur starts?

இந்த ரயில் 501 கி.மீ. தூரத்தை கடக்கும். இதன் வழியே நிறைய நீர் நிலைகள், தென்னை மரங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சம் இடங்களை தாண்டி செல்லும். மணிக்கு 180 கி.மீ வேகம் வீதத்தில் 501 கி.மீ. தூரத்தை 7.5 மணி நேரத்தில் கடக்கும். திருவனந்தபுரம்- கண்ணனூர் இடையே 6 நிறுத்தங்களில் ரயில் நிற்கும். அவை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரு்சூர், திரூர், கோழிக்கோடு ஆகியவை ஆகும்.

திருவனந்தபுரத்திலிருந்து திருச்சூர் செல்ல இந்த ரயில் 4 மணி நேரம் 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இந்த ரயில் சேவையை வரும் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலுக்கான முதல் சோதனை ஓட்டம் கடந்த 17ஆம் தேதி நடந்தது. இந்த ரயில் திருவனந்தபுரத்தில் காலை 5 மணிக்கு கிளம்பி இரவுக்குள் மீண்டும் திருவனந்தபுரத்திற்கே வந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+