கள் குடித்து ஓணம் கொண்டாட்டம்.. பள்ளியில் மாணவருக்கு நேர்ந்த பரிதாப நிலை.. தீவிர சிகிச்சையில் அனுமதி
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றபோது, புத்தகப் பையில் கள்ளை எடுத்துச் சென்று குடித்ததில் ஒரு மாணவன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளுக் கடைக்கு பின்புறம் உள்ள புதர் பகுதியில் பாதி கள்ளை குடித்துவிட்டு கள்ளை பாட்டிலுடன் புத்தகப்பையில் வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து, பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மீதியிருந்த கள்ளை கழிவறையில் வைத்து குடித்துள்ளனர். அதில், ஒரு மாணவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்க நிலைக்குச் சென்றுள்ளார்.

சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது மற்றும் கள் அருந்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதோடு மாணவ, மாணவிகளின் எதிர்காலமே கேள்விக் குறியாகி விடுகிறது. இதன் அபாயம் தெரியாமல் ஸ்டைலுக்கு மது, கள் அருந்தும் மாணவர்கள் சில சமயங்களில் உயிரையே இழக்கும் சம்பங்களும் அரங்கேறி வருகின்றன. பண்டிகைக் காலங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள் என மது அருந்துவதை ஒரு சம்பிரதாயமாகவே மாற்றிவிட்டனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தின்போது, கள் அருந்திய மாணவர்களில் ஒருவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்க நிலைக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் அரசு சார்பில் கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து கள்ளுக் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கு, சிறுவர்களுக்கு இந்த கள்ளை விற்பனை செய்யக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனாலும், சட்ட விரோதமாக மாணவர்களுக்கு ஒரு சில பகுதிகளில் கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்த்தலாவை அடுத்த பள்ளிப்புரம், தைக்காட்டுச்சேரி பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஓணம் பண்டிகை கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. அதே பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 4 பேர் சேர்ந்து பள்ளிச் சந்தை கள்ளுக் கடைக்குச் சென்று கள் வாங்கியுள்ளனர்.
சிறுவர்களுக்கு கள் விற்பனை செய்ய தடை உள்ளபோதிலும், மாணவர்களிடம் இருந்து கள்ளுகடை ஊழியர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கள் விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, பள்ளிப்புறத்தில் உள்ள புதர்க்காட்டுப் பகுதிக்குச் சென்ற மாணவர்கள் அங்கு கள்ளை குடித்துள்ளனர். பாதி குடித்துவிட்டு மீதமிருந்த கள்ளை பாட்டிலுடன் புத்தகப்பையில் வைத்து பள்ளிக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து மீதி கள்ளை பள்ளியின் கழிவறையில் வைத்து மாணவர்கள் குடித்துள்ளனர்.
கள் அருந்திய மாணவர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவரை மீட்டு உடனடியாக துறவூர் தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அந்த மருத்துவமனையில் இருந்து சேர்ததலாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த மாணவர் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவருக்கு கடந்த இரண்டு நாள்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து, மதுவிலக்கு பிரிவு சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, மாணவருக்கு கள் விற்பனை செய்த கள்ளுக்கடை ஊழியர் மனோகரன், மேலாளர் மோகனன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்த கள்ளுக்கடை உரிமதாரர்களான சந்திரப்பன், ரமா தேவி, அசோகன், ஸ்ரீகுமார் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள் அருந்திய மாணவரின் உடல்நிலை சரியான பின்னர் அவருக்கு மதுவிலக்குத் துறை சார்பில் முறையான ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications