கேரளா, மகாராஷ்டிராவில் கொட்டும் மழை.. மக்கள் முடக்கம்.. சில இடங்களில் வாக்குப்பதிவு பாதிப்பு!
மழை காரணமாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் வாக்குப்பதிவு பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
திருவனந்தபுரம்: மழை காரணமாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் வாக்குப்பதிவு பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

கேரளா எப்படி
கேரளாவில் இன்று 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. வட்டியூர்க்காவு, அரூர், கொன்னி, எர்ணாகுளம், மஞ்சேஸ்வரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ஆனால் அங்கு பெய்து வரும் மழை காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

நல்ல மழை
இங்கு மொத்தம் 9.57 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். கேரளாவில் காலையில் இருந்து நன்றாக மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, ஆலப்புழாவில் மழை பெய்து வருகிறது.

என்ன பாதிப்பு
சரியாக தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்வதால், வாக்கு பதிவு பாதிப்படைந்துள்ளது. அதேபோல் மஹாராஷ்டிராவில் சங்லி, நாசிக், புனே, ரத்னகிரி, அவுரங்காபாத் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

மதியம் எப்படி
இன்று மதியத்திற்கு பிறகு அங்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மழைக்கு இடையிலும் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.

ஆனால் கனமழை
ஆனால் கேரளா, மஹாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு பாதிப்படைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications