அதிரும் மலையாள சினிமா.. இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக புகார்.. நிவின் பாலி பரபர விளக்கம்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பைக் கிளப்பிய இருந்த நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கமளித்துள்ளார். தன் மீதான பாலியல் புகார்கள் பொய்யாது என்று சொன்ன நிவின் பாலி, இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
கேரளாவில் கடந்த 2015இல் பிரபல நடிகை ஒருவர் ஓடும் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
ஹேமா கமிட்டி ரிப்போர்ட்: இந்த ஹேமா கமிட்டி கேரள அரசிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே தனது ரிப்போர்ட்டை அளித்துவிட்டது. இருப்பினும், அதைக் கேரள அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பின்னரே அந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல நடிகைகள் வெளிப்படையாக தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்துப் பேசத் தொடங்கியுள்ளனர்.
வழக்குப்பதிவு: இதையடுத்து இது குறித்து விசாரிக்கக் கேரள அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. இந்தச் சூழலில் நேரியமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது புகாரளித்திருந்தார். பட வாய்ப்பு அளிப்பதாகக் கூறி தன்னை துபாயில் வைத்து பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் எர்ணாகுளம் ஊன்னுக்கல் போலீசார் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
விளக்கம்: இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது விளக்கத்தை அளித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் நிவின் பாலி கூறியுள்ளார்.

சட்டப்பூர்வ நடவடிக்கை: இது தொடர்பாக அவர், "ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தவறான தகவல் பரவி வருகிறது.. இது முற்றிலும் பொய் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். அக்கறைக்கு நன்றி. மற்ற விஷயங்களை சட்டப்பூர்வமாகக் கையாள்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications