2 ஆண்டுகளாக காணாமல் போன பூனை.. திடீரென விசிட் அடித்ததில் உறைந்த குடும்பத்தினர்.. செம சம்பவம்
திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தினரிடத்திலிருந்து பிரிந்து சென்ற வளர்ப்பு பூனை ஒன்று மீண்டும் வீடு திரும்பியுள்ள சம்பவம் அக்குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் இந்த பூனை சிக்கியதில் அதன் காலில் அடிப்பட்டுள்ளது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பூனை நலமுடன் வாழ்ந்து வந்தது.
இப்படியிருக்கையில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் பூனை காணாமல் போயுள்ளது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே வீட்டுக்கு திரும்பியுள்ளது.

ரதீஷ்
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு செல்லப்பிராணி பிடிக்கும். அந்த வகையில் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி நகரில் உஷாம்மா என்பவர் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த பூனைக்கு 'கட்டப்பனைலே ஹிருத்திக் ரோஷன்' எனும் மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள டையலாக்கில் உள்ள 'ரதீஷ்' எனும் பெயரை சூட்டியிருந்தார். குடும்பத்திலும் அக்கம் பக்கத்தினருடனும் இந்த பூனை இயல்பாக பழகி வந்துள்ளது.

காணாமல் போன பூனை
ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென இந்த பூனை விபத்தில் சிக்கியுள்ளது. இதனால் இதன் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பதறிப்போன உஷாம்மா குடும்பத்தினர் பூனையை மருத்துவமனையில் சேர்த்து ரூ.6,000 செலவில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர். இதனால் இந்த பூனையின் மீது அனைவருக்கும் பரிதாபம் இருந்துள்ளது. அக்கம் பக்கம் குடியிருப்போரும் பூனைக்கு உணவளிப்பதை வாடிக்கையாக வைத்துக்கொண்டனர். இப்படியாக இருக்கையில் கொரோனா பெருந்தொற்று வந்துள்ளது.

கொரோனா காலகட்டம்
இந்த காலத்தில் அனைவரும் உயிருக்கே அஞ்சி வீட்டில் முடங்கியிருந்த நிலையில் பூனையை சரியாக கவனிக்க முடியாமல் போயுள்ளது. இது பூனைக்கும் குடும்பத்தினருக்குமான இடைவெளியை அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் பூனை திடீரென காணாமல் போயுள்ளதை குடும்பத்தினர் உணர்ந்துள்ளனர். பின்னர் அக்கம் பக்கத்தில் தேடியும் பூனை கிடைக்கவில்லை. நாளடைவில் பூனையை தேடுவதையே கைவிட்டுள்ளனர்.

மீண்டும் திரும்பியது
ஆனால் திடீரென்று நேற்று பூனை உஷாம்மாவின் வீடு தேடி வந்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உரைந்துபோயுள்ளனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினரும் பூனையை கொஞ்ச தொடங்கிவிட்டனர். இது அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியுள்ளது. இந்த பூனையை பார்ப்பதற்காக பக்கத்து நகரங்களிலிருந்தும் சிலர் வந்து செல்கின்றனர். தற்போது கேரளாவில் இந்த 'ரஷீத்' பூனைதான் ஹாட் டாப்பிக்












Click it and Unblock the Notifications