சான்ஸே இல்லை.. நர்ஸ் சந்தியாவுக்கு போனை போட்ட கடைக்காரர்.. தித்தித்த நேர்மை.. விக்கித்த மக்கள்.. ஆஹா
லாட்டரியில் முதல்பரிசு பெற்ற சந்தியா, கடைக்காரரின் நேர்மையை பாராட்டினார்
திருவனந்தபுரம்: தித்திப்பு செய்தி என்பதைவிட, நேர்மைக்கு சான்றாக இந்த செய்தி பறைசாற்றப்பட்டு வருகிறது.. கேரளாவில் என்ன நடந்தது என்று பாருங்கள்.
கேரளாவில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளது... இதன்காரணமாக லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது... அம்மாநில அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை உள்ளது... அதனால்தான், வாரம் முழுக்க லாட்டரி சீட்டு குலுக்கல் இங்கு நடைபெறும்..
இதுபோக, பண்டிகை காலங்களில் சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்படுகின்றது.. அந்த வகையில், ஓணம் பம்பர், விஷு பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல்கள் என விதவிதமான ஆஃபர்கள் உள்ளன
இந்த லாட்டரி சீட்டு விற்பனையில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்... சிறுசிறு கடைகளிலும் இச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதுண்டு... அந்த வகையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் ஒரு லாட்டரி கடை செயல்பட்டு வருகிறது.. இந்த கடையில் இதே பகுதியை சேர்ந்த நர்ஸ் சந்தியா, அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கி கொண்டு போவார்.. கடைக்காரரும், ரெகுலர் கஸ்டமர் சந்தியாவுக்கு, ஒரு சீட்டை எடுத்து தனியாக ஒரு கவரில் போட்டு வைத்துவிடுவார்.

ஹைலைட்
பரிசு குலுக்கல் நடந்த பிறகு, அந்த சீட்டுக்கு பரிசு விழுந்திருக்கிறதா? என்பதை பார்த்து விட்டு அதனை நர்ஸ் சந்தியாவிடம் சொல்வார்.. ஆனால், இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், கடைக்காரர் தனக்காக எடுத்து வைக்கும் லாட்டரி சீட்டை ஒருநாள்கூட, நர்ஸ் சந்தியா வாங்கி பார்த்ததே இல்லையாம்.. கடைக்காரர் என்ன சொல்வாரோ, அதை மட்டும் கேட்டுக் கொள்வார்.. அந்த அளவுக்கு நம்பிக்கை அந்த கடைக்காரர் மீது நர்ஸ் சந்தியாவுக்கு இருந்தது.

லாட்டரி லக்
இப்படி பல மாதங்களாகவே சந்தியா லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.. சமீபத்தில் ஸ்திரி சக்தி லாட்டரி விற்பனை நடந்தது... இதற்காக வழக்கம்போல், சீட்டு ஒன்றை எடுத்து நர்ஸ் சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்தார்... 2 நாட்களுக்கு முன்பு அதன் குலுக்கல் முடிவுகள் வெளியானது... இதில் நர்ஸ் சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்த சீட்டுக்கு, முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்திருந்தது. நர்ஸ் சந்தியாவுக்கு கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் நம்பர்கூட தெரியாது.. அந்த சீட்டுக்குதான் பரிசு விழுந்த தகவலும் தெரியாது.
Recommended Video

நர்ஸ் ஆச்சரியம்
ஆனால், கடைக்காரருக்கு தெரியும்.. கடைக்காரை எந்த அளவுக்கு சந்தியா நம்பினாரோ, அதே அளவுக்கு தங்கள் கஸ்டமரையும் கடைக்காரர் நம்பினார்.. சீட்டு விற்பனை என்றாலும், அதில் ஒரு நேர்மையும், நாணயமும் கொண்டிருக்க வேண்டும் என்று நம்பினார்.. அதனால்தான், சந்தியாவுக்கு போனை போட்டு, முதல் பரிசு ரூ. 75 லட்சம் விழுந்திருப்பதை சொன்னார்.. இதைக் கேட்டு திக்குமுக்காடிப்போனார் சந்தியா.. ஒருபக்கம் முதல்பரிசு சந்தோஷம், இன்னொரு பக்கம் கடைக்காரரின் நாணயம் கண்டு, ஆச்சரியப்பட்டார்.. கடைக்காரன் நேர்மையை மனதார பாராட்டினார்..

தித்திப்பு செய்தி
இதை பற்றி நர்ஸ் சந்தியா சொல்லும்போது, எனக்காக கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் நம்பர் எனக்கு தெரியாது... ஆனால், அவர் நினைத்திருந்தால், அந்த சீட்டை மாற்றி இருக்கலாம்... ஆனால் அவர் அப்படி செய்யவில்லை... அவரது நேர்மை எனக்கு புல்லரிக்க வைக்கிறது" என்றார்.. இந்த செய்தி சோஷியல் மீடியாவிலும் பரவியது... இதை பார்த்து இணையவாசிகள் அதற்கு மேல் வியந்து போய்விட்டனர்.. லாட்டரி விற்பனையாளரின் நேர்மையை திரண்டு வந்து பாராட்டி வருகிறார்கள்... உண்மைதான்.. நேர்மை என்பது நாம் புதிதாக ஒருவரிடமிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய விஷயம் கிடையாது.. அது மனித மனங்களில் இயற்கையாக பொதிந்துபோய் இருக்கக்கூடிய மிக உயரிய அறம், என்பதைதான் அந்த கடைக்காரர் புரிய வைத்துள்ளார்..!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications