படத்தை தாறுமாறாக விமர்சித்த விமர்சகர்கள்.. திடீரென பாய்ந்த வழக்கு! இதுவே முதல்முறை.. போலீஸ் வார்னிங்
திருவனந்தபுரம்: தனது படம் குறித்துத் திட்டமிட்டு நெகடிவ் விமர்சனம் பரப்பப்படுவதாக இயக்குநர் அளித்த புகாரின்படி மொத்தம் 8 பேர் மீது மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் ஆண்டிற்குப் பல நூறு படங்கள் வருவதால் மக்கள் அனைத்து படங்களுக்கும் செல்வதில்லை. திரைப்படத்தின் விமர்சனத்தை வைத்தே படங்களுக்கு வருகிறார்கள். இதனால் விமர்சனங்கள் இப்போது முக்கியமானதாக மாறுகிறது.

அதேநேரம் இந்த விமர்சனங்களை வைத்து சிலர் பணம் பறிக்கும் சம்பவங்களும் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கேரளாவில் இது தொடர்பாக போலீசார் நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுவே முதல்முறை: கேரளாவில் திரைப்படம் நன்றாக இல்லை என்று நெகடிவ் விமர்சனம் கொடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட விமர்சனத்திற்காக மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற நெகடிவ் விமர்சனங்கள் வரும் போது அவை சமூக வலைத்தளங்களுடன் நின்றுவிடும். ஆனால், இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
படம் வெளியான உடனேயே தனது படம் குறித்து நெகடிவ் விமர்சனங்கள் வெளியிடப்பட்டதாகவும் திட்டமிட்டு தனது படத்தை மோசமாகச் சித்தரிக்க வேண்டும் என்று இப்படிச் செய்வதாகவும் இயக்குநர் உபைனி இப்ராஹிம் அளித்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்..
9 பேர் மீது வழக்குப்பதிவு: இயக்குநர் உபைனி இப்ராஹிம் அளித்த புகாரின் அடிப்படையில் மொத்தம் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்னேக் பிளாண்ட் புரோமோஷன் கம்பெனி உரிமையாளர், பேஸ்புக்கில் விமர்சித்த அனூப் அனு என்ற நபர், யூடியூபர்கள் அருண் தரங்கா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தவிர யூடியூப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களும் எட்டு மற்றும் ஒன்பதாவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாகக் கேரளா ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது திட்டமிட்டு படங்கள் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்புவோரைத் தடுக்க நெறிமுறையை வகுத்துள்ளதாகவும், நெகடிவ் விமர்சனங்கள் மூலம் திரைப்படங்கள் குறித்து போலியான தகவல்களைக் கொடுப்போர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்றும் கேரளா போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
கேரள ஐகோர்ட்: போலி ஐடிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கும் போதிலும் பணம் கேட்டு மிரட்டும் திரைப்பட விமர்சகர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியும் என்றும் கேரள டிஜிபி தெரிவித்தார். பணம் தரவில்லை என்பதற்காகவே குறிப்பிட்ட படங்களைக் குறிவைக்கும் விமர்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
போலீசாரின் இந்த நடவடிக்கையை வரவேற்ற கேரள உயர் நீதிமன்றம், தவறான நோக்கத்துடன் வெளியிடப்படும் திரைப்பட விமர்சனங்களைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் , இந்த விவகாரத்தில் இன்னுமே நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூறினர். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் பதிலளிக்கக் கூறி உத்தரவிட்டனர்.
ஏற்கவே முடியாது: இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட் மேலும் கூறுகையில், "இங்கே அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அதற்காகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் நெகடிவ் விமர்சனங்களை அனுமதிக்க முடியாது. அதிலும் யாரென்றே தெரியாத சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் போலி ஐடிகளில் இருந்து வரும் நெகடிவ் விமர்சனங்களை ஏற்கவே முடியாது.
குறிப்பிட்ட அந்த கருத்தைச் சொன்னது யார் என்று தெரிய வேண்டும். அதிலும் படம் குறித்த விமர்சனத்தைப் போடும் போது தங்கள் அடையாளத்தை வெளிப்படையாகக் கூற வேண்டும். இப்போது சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற கணக்குகள் தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது" என்றனர்.
அரோமலின்டே ஆதி பிராணாயாம் என்ற மலையாள திரைப்படம் கடந்த செப். 15ஆம் தேதி வெளியானது. அந்தப் படத்தின் இயக்குநர் உபைனி அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications