காலி வயிற்றில் உணவின்றி கிடந்த துஷாரா.. வெறும் 21 கிலோ எடை.. 2025ல் மாமியாரின் மறக்க முடியாத தண்டனை
திருவனந்தபுரம்: காலங்கள் எவ்வளவு மாறினாலும், தொழில்நுட்பம் எவ்வளவுதான் பெருகினாலும், கல்வி எவ்வளவு அதிகரித்தாலும், வரதட்சணை கொடுமை மட்டும் அப்படியே உள்ளது.. வரதட்சணையின் வடிவங்கள்தான் மாறுகிறதே, தவிர, இதனால் உயிரை விடும் பெண்களின் எண்ணிக்கை குறையவில்லை.. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் தண்டனைகளை தந்து வருகிறது.. அந்தவகையில், விஷ்வமயா வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பானது, இந்த 2025-ல் மறக்க முடியாத தீர்ப்பாகும்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது பூயப்பள்ளி என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் தம்பதி லாலி - கீதா.. இதில் லாலிக்கு 66 வயது, கீதாவுக்கு 62 வயதாகிறது..

வரதட்சணை கொடுமை துஷாரா
இந்த தம்பதியின் 36 வயது மகன் சந்துலால் என்பவருக்கு துஷாரா என்ற பெண்ணுடன் கடந்த 2013-ல் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.. கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்த துஷராவுக்கு, 25 பவுன் நகைகளும், ரூ. 5 லட்சம் பணமும் வரதட்சணையாக தரப்பட்டது.
சில மாதங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இவர்களது திருமண வாழ்க்கையில், வரதட்சணை சூறாவளி வீசத் துவங்கியது.. கூடுதல் வரதட்சணை கேட்டு சந்துலாலும், அவரது பெற்றோரும் துஷாராவை கொடுமைப்படுத்தினார்கள்.. இதனிடையே கடந்த 2018ல், துஷாரா இறந்துவிட்டார்.. ஆனால், இவர் எப்படி இறந்தார் என்று உடனடியாக யாருக்குமே தெரியவில்லை.
வெறும் 21 கிலோ
துஷாராவின் இழப்பானது, அவரது பெற்றோரை நிலைகுலைய வைத்தது.. தங்களது மகளின் மரணத்திற்கு கணவன் குடும்பத்தினர் செய்த வரதட்சணையே காரணம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி துஷாராவின் பெற்றோர் போலீசுக்கு போனார்கள்..
இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து, துஷாராவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான், துஷாராவை பட்டினி போட்டே மாமியார் கொன்றது அம்பலமானது.. அதாவது துஷாரா இறக்கும்போது அவரது உடல் எடை வெறும் 21 கிலோ மட்டுமே இருந்துள்ளது.. இதை கண்டு டாக்டர்களே அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.. வயிற்றில் உணவின்றியே அந்த பெண் இறந்து கிடந்தது தெரியவந்தது.
மறக்க முடியாத தீர்ப்பு
மகளின் மர்ம மரணம் குறித்து பெற்றோர் தந்த புகாரும், இதைதொடர்ந்து நடந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும்தான், துஷாரா மரணத்தின் மர்மத்தை வெளிச்சம் போட்டு காட்டியது..
இதையடுத்து, சந்துலால், அவரது அப்பா லாலி, அம்மா கீதா லாலி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவந்தது... ஆனால், வழக்கு நடந்து வந்தபோதே, லாலி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தொடர்ந்து இந்த கொலை வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷ், கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தார்.

பட்டினி போட்டே கொலை
பட்டினி போட்டே இளம்பெண்ணை கொன்ற கணவர் சந்துலால் மற்றும் அவரது தாயார் கீதா லாலி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.. வயிற்றில் உணவின்றி இருந்ததால் இது கொடூரமான கொலை என நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த 2025-ல் எத்தனையோ தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தந்திருந்தாலும், துஷாரா வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது, வரதட்சணை கொடுமைக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications