Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய சர்க்கஸின் பிதாமகன், ஜெமினி சங்கரன் காலமானார்.. 100 வயதை தொடும் நிலையில் சோகம்: கண்ணீர் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சர்க்கஸ் கலையின் முன்னோடியும், இந்திய சர்க்கஸை நவீனமயமாக்கியவருமான 'ஜெமினி சங்கரன்' எனும் 'சங்கரன்' இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் அழிவின் விளிம்பின் உள்ள கலைகளில் சர்க்கஸ் கலையும் ஒன்று. சர்க்கஸ் பலவீனமானதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. சர்க்கஸ் போனால் ஒட்டகம், சிங்கம், கரடி பார்க்கலாம் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு பின்னர் இதனை டிவியிலும் செல்போனிலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற நிலை உருவானது. மற்றொருபுறம் ஆபத்தான விலங்குகள் சர்க்கஸ்களில் வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்டது. அல்லது அனுமதி வழங்க ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

Gemini Sankaran, the pioneer of Indian circus, passed away due to ill health

ஆனால் சர்க்கஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதனை இந்திய தன்மையில் நாடு முழுவதும் கொண்டு சென்ற வேலையை 'ஜெமினி சங்கரன்' செய்ய தொடங்கினார். 1924ம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர், அம்மாநிலத்தின் பிரதான தற்காப்பு கலைகளான களரி, வர்மம் போன்றவற்றை கற்றுக்கொண்டார். பின்னர் ஜிம்னாஸ்டிக் பயிற்சி கொடுத்து வந்த கீலெரி குஞ்சிக் கண்ணனிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றார். இதனையடுத்து ராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலகப் போர் வரை பணியாற்றி அதன் பின்னர் ஓய்வு பெற்றுக்கொண்டார்.

பின்னர் இவரது கவனம் மெல்ல சர்க்கஸ் பக்கம் திரும்பியது. தொடக்கத்தில் சில சர்க்கஸ் கம்பெனிகளுடன் சேர்ந்து பணியாற்றினார். ஒரு கட்டத்தில் சர்க்கஸ் மீதான ஆர்வம் அதிகரித்து. ஆர்வம் என்பதை விட சர்க்கஸ் மீதான காதல் அதிகரித்தது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அவர் அந்த அளவு சர்க்கஸையும் அதன் கலைஞர்களையும் நேசித்தார். இந்த நேசம் ஒரு சொந்த சர்க்கஸை வாங்குவது என்கிற நிலைக்கு இவரை உந்தி தள்ளியது. இப்படியாக 1951ம் ஆண்டு விஜயா சர்க்கஸை வங்க அதற்கு ஜெமினி சர்க்கஸ் என்று பெயரிட்டார்.

இது எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை கொடுத்தது. எனவே இரண்டாவதாக ஜம்போ சர்க்கஸை அவர் விலைக்கு வாங்கினார். இந்தியா முழுவதும் சுற்றி அனைத்து இடங்களிலும் சர்க்கஸை போட்டார். ஆனால் இவர் மற்ற சர்க்கஸ் கம்பெனியின் நிறுவனர்களை போல மேலிடத்தில் அமர்ந்துக்கொண்டு மேற்பார்வை செய்வதோடு தனது பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக எந்தெந்த ஊருக்கு போகிறாரோ அந்த ஊருக்கு என உள்ள கலைகள் குறித்து ஆர்வமாக கேட்டு அறிந்துக்கொள்வார். வாய்ப்பிருப்பின் அதனை கற்றுக்கொள்ளவும் செய்வார்.

இப்படி கற்றுக்கொள்ளப்பட்ட கலையை தனது சர்க்கஸில் பயன்படுத்துவார். இதனை பார்க்கும் அந்த ஊர் மக்களுக்கு இவரது சர்க்கஸை மிகவும் நெருக்கமாக்கியது. இவரது சர்க்கஸ் என்றாலே அதற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. வெளிநாட்டின் சர்க்கஸ் நுணுக்கங்களோடு உள்நாட்டின் கலைகளை சேர்த்து பயன்படுத்தியதுதான் இவரது சர்க்கஸின் மிகப்பெரிய பலம். இதனால் இந்தியா முழுவதும் இவரது சர்க்கஸ் பேமஸானது. இதனையடுத்து இவரை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது.

99 வயதான ஜெமினி சங்கரன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கேரளாவின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "வெளிநாட்டுக் கலைஞர்களின் திறமைகளை உள்ளடக்கி இந்திய சர்க்கஸ் கலையை நவீனமயமாக்குவதில் சங்கரன் முக்கிய பங்கு வகித்தார். அவரது இழப்பு நாட்டிற்கும் சர்க்கஸ் கலைக்கும் பேரிழப்பாகும்" என்று கூறியுள்ளார்.

ஜெமினி சங்கரன் இந்தியாவின் பல்வேறு குடியரசு தலைவர்கள் மற்றும் பிரதமர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் இன்று அந்த பிரதமர்கள், குடியரசு தலைவர்கள் என யாரும் உயிரோடு இல்லை. சங்கரனும் தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டார். சர்க்கஸும் இன்று மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+