20.5 செமீ மழை பெய்யும்.. 50 கிமீ வேகத்திற்கு காற்று வீசும்.. கேரளா இடுக்கிக்கு ரெட் அலர்ட்.. கனமழை!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கேரளாவில் இடுக்கி மாவட்டத்திற்கு நாளை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ரெட் அலர்ட் தற்போது விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    200 ஆண்டுகளில் முதல் முறையாக வரலாறு படைக்கப்போகும் சென்னை

    தமிழகத்தில் நேற்று மாலையில் இருந்து மிக கனமழை பெய்து வருகிறது.அதிலும் சென்னையில் மிக கனமழை பெய்து சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. தமிழகம் மட்டுமின்றி மஹாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கத்திலும் மழை பெய்து வருகிறது.

    அதேபோல் கேரளாவிலும் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

    கேரளா எங்கே

    கேரளா எங்கே

    கேரளாவில் இருக்கும் வயநாடு, கோட்டயம், இடுக்கி, கொச்சி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. அதேபோல் கேரளாவில் வரும் நாட்களிலும் கடுமையான கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல் நிலச்சரிவு ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    காற்று மழை

    காற்று மழை

    தென் மேற்கு பருவக்காற்று தொடங்கியதில் இருந்தே கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. அங்கு பல்வேறு கிராமங்களில் இதனால் வெள்ளம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் பெய்துவரும் மிக நீண்ட மழை காலத்தில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த மழை இப்போதைக்கு நிற்க வாய்ப்பு இல்லை. வரும் நாட்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    இடுக்கி மழை

    இடுக்கி மழை

    இந்த நிலையில் தற்போது கேரளாவில் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் தற்போது விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும். இடுக்கியில் 20.5 செமீ மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ரெட் அலர்ட் விடுப்பு

    ரெட் அலர்ட் விடுப்பு

    அதேபோல் சில பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போதே கனமழை பெய்து வருகிறது. அங்கு மீட்பு பணிகளை கவனிக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் 40-50 கிமீவேகத்தில் காற்று வீசவும் வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+