Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகையை "உறவு"க்கு அழைத்த நடிகர்கள்.. அம்பலமான 15 பேரின் அசிங்கங்கள்! ஹேமா கமிட்டியில் அம்பலம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அட்ஜெஸ்ட்மென்ட் செய்யும் நடிகைகளுக்கு மட்டுமே சினிமாவில் சான்ஸ் தருவதாக ஹேமா கமிட்டியில் அம்பலமாகியிருக்கிறது. பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை மலையாள திரையுலகினர் ஒத்துழைக்கும் நடிகைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.. இது தொடர்பான வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.. இவருடன் மேலும் 9 பேர் கைதாகியிருந்தனர். இந்த வழக்கு கேரளாவில் நடந்து வருகிறது.

Hema Committee Hema Committee report Kerala Film Industry

நடவடிக்கைகள்: இதைத்தொடர்ந்து ஷூட்டிங் தளத்தில் நடிகைகள் தொடங்கி அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள சினிமாத்துறையின் பெண்கள் அமைப்பினர் முதல்வர் பினராயி விஜயனுககு மனு அளித்திருந்தனர்.

குறிப்பாக, ஷூட்டிங்கில் பெண்களுக்கு, டிரஸ் மாற்றக்கூட வசதி செய்து தருவதில்லை.. பாத்ரூம் வசதியும் இல்லை.. சினிமா வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக அட்ஜெஸ்ட் செய்யும் துன்புறுத்தல்களையும் சகிக்க வேண்டிய நிலைமை உள்ளது.. இதுகுறித்து புகார் அளிக்கக்கூட பெண்கள் யாருமே முன்வருவதில்லை என்று கூறப்பட்டது.

இதையடுத்து, கேரள நடிகைகள், மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க வேண்டும் என்று நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது.

விசாரணை: இந்தக் கமிஷனானது, பாதிக்கப்பட்ட பல நடிகைகள் உள்படப் பெண் கலைஞர்களிடம் நேரில் விசாரணை நடத்தி 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படாமலேயே இருந்தது மிகப்பெரிய குழப்பத்தை தந்து வந்தது..

Hema Committee Hema Committee report Kerala Film Industry

அதுமடுமல்ல, ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று பிரபல மலையாள தயாரிப்பாளர் சஜிமோன் கேரள ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதேபோல, பிரபல நடிகை ரஞ்சனியும் இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என்று தடை கோரி கோர்ட்டுக்கு ஓடினார்.

அறிக்கை தாக்கல்: எனினும், தகவல் உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட உத்தரவிட்டது. அதன்படி நான்கரை வருடம் கழித்து, இன்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏராளமான பரபரப்பு குற்றச்சாட்டுகள் வெளியாகியிருக்கின்றன.. அத்துடன் சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, "நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கமானது, மலையாள சினிமாவில் அதிகமாகவே பரவியிருக்கிறது. பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி நடிகைகளை, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கட்டாயப்படுத்துகிறார்கள்.. பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

முத்தக் காட்சி, நிர்வாணமாக நடிக்க நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.. இதற்கு மறுத்தால் மிரட்டப்படுகிறார்கள். நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட லிஸ்டில் ஏராளமான முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள்.. பாலியல் ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகளுக்கு சோஷியல் மீடியாவில் தொல்லைகள் தரப்படுகின்றன.

புகார்கள்: வலுக்கட்டாயமாக நுழைந்து ஆபாசமாக பேசி பெண்களை, பாலியல் ரீதியாக பணிய வைக்க பார்க்கிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்ய தயங்குகின்றனர்.

"காவல்துறை உதவியை ஏன் நீங்கள் நாடுவதில்லை" என்று நாங்கள் கேட்டபோது,​​ இதுபோன்ற சம்பவங்களுக்கு புகார் அளித்தால், பல கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. அந்த பயத்தினால்தான், இதை பற்றியெல்லாம் வாய் திறக்காமல் இருக்கிறோம் என்று பாதிக்கப்பட்ட பெண்களே சொல்கிறார்கள்" என்றெல்லாம் ஹேமா அறிக்கையில் புட்டு புட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

பரிந்துரை: அதுமட்டுமல்லாமல், நடிகர் நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்களை ஓட்டுநர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும். ஷூட்டிங்கில் பங்கேற்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பான இருப்பிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஷூட்டிங் நடக்கும் இடங்களில் மதுபானம், போதைப்பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஹேமா கமிட்டியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.

அம்பலம்: பாலியல் ரீதியாக நடிகைகளும், சினிமா பெண் கலைஞர்களும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தியே, இந்த ஹேமா கமிஷன் நான்கரை வருடம் முன்பு நியமிக்கப்பட்டது. அன்றைய தினம் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த அதே புகார்கள்தான், இன்றைய தினம் ஹேமா கமிட்டியின் அறிக்கையிலும் நிரூபணமாகியிருக்கிறது. இது கேரளா சினிமாவையே தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. பிரபல நடிகர்களும் இந்த புகாரில் சிக்கியிருப்பது, அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+