Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உல்லாசத்திற்கு அழைத்து தொழிலதிபரை நிர்வாணமாக்கி.. பணம் பறித்த பிரபல இன்ஸ்டா ஜோடி! சிக்கியது எப்படி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தொழிலதிபரை உல்லாசமாக இருக்க அழைத்து, நகை மற்றும் பணத்தை ஏமாற்றிப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்தில் நேற்றைய தினம் மிகுந்த பரபரப்புடன் இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார். மிகுந்த பதற்றத்துடன் இருந்த அவரை முதலில் போலீசார் ஆசுவாசப்படுத்தினர்.

அதன் பின்னர் அவர் தனக்கு நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல, அதை கேட்டு போலீசார் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டனர்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

அந்த தொழிலதிபர் கேரளாவின் திருச்சூர் அடுத்துள்ள கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர். இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். முதலில் சாதாரணமாகவே இருவரும் பேசி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் நெருக்கமாகப் பழக ஆரம்பித்துள்ளனர். அந்த தொழிலதிபரும் தனது தனிப்பட்ட தகவல்களை அவரிடம் தெரிவித்துள்ளார்.

 ஆசை வார்த்தை

ஆசை வார்த்தை

அந்த பெண்ணும் தனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும் கூட தனது கணவர் துபாயில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் தான் மட்டும் நோய்வாய்ப்பட்ட தாயுடன் தனியாக இருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். யாரும் இல்லை என்பதால் வீட்டிற்கு வந்தால் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்றும் அந்த தொழிலதிபரிடம் உருக உருக ஆசையாகப் பேசியுள்ளார்.

 5 பேர்

5 பேர்

இதையெல்லாம் நம்பிய அந்த தொழிலதிபரும் ஆசையாக அந்த பெண் கூறிய வீட்டிற்குச் சென்றுள்ளார். பாலக்காடு அருகில் யாக்கரை என்ற பகுதியில் இருக்கும் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள அந்த வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனால் ஆசையுடன் அந்த தொழிலதிபர் வீட்டின் உள்ளே நுழைந்து உள்ளார். அப்போது திடீரென வீட்டில் 5 பேர் நுழைந்துள்ளனர்.

 நிர்வாணம்

நிர்வாணம்

ஆயுதங்களைக் காட்டி தொழிலதிபரை மிரட்டிய ஐந்து பேரும், அவரை நிர்வாணப்படுத்தி ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர். கேட்கும் பணத்தைத் தராவிட்டால் நிர்வாண போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டிய அவர்கள், தொழிலதிபர் போட்டிருந்த நான்கு பவுன் செயின், மொபைல், ஏடிஎம் கார்டு, கார், 10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பிடுங்கி உள்ளனர்.

எஸ்கேப்

எஸ்கேப்

அது மட்டுமின்றி கூடுதலாகவும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் முழித்த அந்த தொழிலதிபர், கொடுங்கல்லூர் பிளாட்டில் பணம் இருக்கும், அங்குச் சென்று பணம் எடுத்து வருகிறேன் எனச் சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அவரை காரில் ஏற்றி, கொடுங்கல்லூருக்கு அழைத்துச் சென்றது. இருப்பினும், வழியிலேயே அந்த தொழில் அதிபர் காரிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்

 போலீஸ் நிலையம்

போலீஸ் நிலையம்

அங்கிருந்து நேராகப் பாலக்காடு டவுன் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவர், நடந்த விவரத்தைக் கூறி உள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போலீசார், இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த கண்ணூர் கோகுல் தீப் மற்றும் அவரது மனைவி தேவ்வை கைது செய்தனர். மேலும், கோட்டயம் பகுதியைச் சார்ந்த சரத் , திருச்சூரை சார்ந்த அஜித், வினய் மற்றும் ஜிஷ்ணு உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது

கைது

கைது செய்யப்பட்ட சரத் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் பெண் போலத் தொழிலதிபரிடம் நெருக்கமாகப் பேசியுள்ளார். ஆசை வார்த்தைகளைப் பேசிய அவரை மயக்கி நிலையில், பணம் பறிக்க கோகுல் தீப் மற்றும் தேவிடம் உதவி கேட்டுள்ளார். திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் பணம் தருவதாகவும் கூறி உள்ளான். இதையடுத்து ஆறு பேரையும் கைது செய்த போலீசார், பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+