"ஹோட்டல் பில்.." இளம்பெண்ணை நிவின் பாலி பலாத்காரம் செய்ததாக புகார்.. வெளியான மிக முக்கிய ஆதாரம்
திருவனந்தபுரம்: மலையாள சினிமாவின் பிரபல நடிகரான நிவின் பாலி மீது சமீபத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். சினிமாவில் வாய்ப்பு தருவதாகச் சொல்லி துபாயில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகாரளித்திருந்தார். இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஹோட்டல் பில் ஒன்று வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2015ல் கேரளாவில் பிரபல நடிகை ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

ஹேமா கமிட்டி: மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரித்த இந்த குழு ரிப்போர்ட்டை கடந்த 2019ம் ஆண்டிலேயே கேரள அரசிடம் சமர்ப்பித்து விட்டது. இருப்பினும், கேரள அரசு அதை வெளியிடவில்லை. நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பிறகு சமீபத்தில் தான் அந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டது. அதில் பல முன்னணி நடிகர்களின் பெயர்களும் இடம்பெற்று இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இது தொடர்பாக விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கேரள அரசு உத்தரவிட்டது. இந்தச் சூழலில் சமீபத்தில் கேரள மாநிலம் நேரியமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது பலாத்கார புகார் அளித்தார். பட வாய்ப்பு அளிப்பதாகக் கூறி துபாயில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
நிவின் பாலி: பெண் அளித்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் ஊன்னுக்கல் போலீசார் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இருப்பினும், தன் மீதான புகார்களைத் திட்டவட்டமாக மறுத்த நிவின் பாலி, தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் கூறினார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது திடீர் திருப்பமாக ஹோட்டல் ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
ஹோட்டல் பில்: கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி தன்னை நிவின் பாலி பலாத்காரம் செய்ததாகப் புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சம்பவம் நடந்த நாளன்று நிவின் பாலி துபாயில் இல்லை.. கேரளாவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இப்போது வெளியாகியுள்ளது. கொச்சியில் உள்ள கிரவுன் பிளாசாவில் அவர் தங்கியதற்கான ஹோட்டல் பில்லை வெளியிட்டுள்ளனர். டிசம்பர். 14 மதியம் முதல் டிசம்பர் 15ம் தேதி மாலை வரை நிவின் பாலி அந்த ஹோட்டலிலேயே தங்கியிருக்கிறார்.
இயக்குநர் தகவல்: மேலும், ஹ்ருதயம் படத்தின் இயக்குநர் வினீத் சீனிவாசனும் குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நாளில் நிவின் பாலி தன்னுடன் இருந்ததாகக் கறியுள்ளார். டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை எர்ணாகுளம் உள்ள கொச்சியில் உள்ள நியூக்ளியஸ் மாலில் 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' படத்தின் படப்பிடிப்பில் நிவின் பாலி இருந்ததாக வினோத் சீனிவாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எர்ணாகுளத்தில் உள்ள நியூக்ளியஸ் மாலில் படப்பிடிப்பு நடந்தது. அங்குக் கூட்டம் அதிகமாக இருந்ததால் கிரவுன் பிளாசாவுக்கு சென்று ஷூட்டிங்கை தொடர்ந்தோம். நள்ளிரவு வரை நிவின் பாலி அங்கு என்னுடன் தான் இருந்தார்" என்றார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications