"சர்ச்" பாதிரியாரின் ஓயாத "ஓரினச்சேர்க்கை" டார்ச்சர்.. கதறிய சிறுவன்.. போக்சோவில் தூக்கிய போலீஸ்

மைனர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சர்ச் பாதிரியார் ஒருவர், சிறுவனை மிரட்டி ஓயாமல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. அவருக்கு 63 வயசாம்..!

2 வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. மலப்புரம் அருகே தேனிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவன் முகேஷ் என்ற 9 வயது சிறுவன்..

இந்த 9 வயது சிறுவனை, 36 வயதான அவரது உறவுக்கார பெண்ணே பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்..

 சொந்தக்கார பெண்

சொந்தக்கார பெண்

சிறுவன் தினமும் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அந்தப் பெண், சிறுவனை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுவிடுவாராம்.. சொந்தக்கார பெண் என்பதால், அந்த சிறுவன் மீது அளவுகடந்த பிரியம் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்துள்ளனர்.. ஆனால், தன் வீட்டிற்கு அழைத்து சென்றதும், வலுக்கட்டாயமாக சிறுவனுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார்... இப்படி ஒரு வருடமாகவே சிறுவனுடன் அந்தப் பெண் உறவு வைத்துக்கொண்டுள்ளார்... சிறுவனுக்கு நாளுக்கு நாள் உடல்நிலை சரியில்லாமல் போனது..

 மாமி

மாமி

அதனால், மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றபோதுதான், மருத்துவர்களிடம் விஷயத்தை சொன்னான் சிறுவன். தன்னுடைய மாமாவின் மனைவி மாமி, தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவிக்கவும், அந்த குடும்பமே அதிர்ந்து போனது.. கடைசியில் அந்த பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.. பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் இந்த போக்சோ சட்டமே உருவாக்கப்பட்டது என்றாலும், சில பெண்களே, போக்சோவில் கைதாகும் கண்றாவி எல்லாம் நம்ம நாட்டிலும் நடப்பது வேதனையை தந்து வருகிறது.

 சர்ச் + ஷாக்

சர்ச் + ஷாக்

இன்னொரு சம்பவம் இதே கேரளாவில் நடந்துள்ளது.. இன்னொரு சிறுவன், ஒரு பாதிரியாரிடம் சிக்கி உள்ளான்.. அதுவும் சர்ச்சுக்கு உள்ளேயே இந்த அக்கிரமம் நடந்துள்ளது.. எர்ணாகுளம் அருகே பரவூர் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் ஜோசப் கொடியன்.. 63 வயதாகிறது.. அருகில் இருக்கும் வராப்புழா செயின்ட் தாமஸ் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வருகிறார்... இந்த சர்ச்சுக்கு, அந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் அடிக்கடி வந்து போவான்.. அவனுக்கு 14 வயதாகிறது..

 ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை

இந்த சிறுவனை மிரட்டி அடிக்கடி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் பாதிரியார்.. நாளுக்குநாள் பாதிரியார் தொல்லை தாங்காத அந்த சிறுவன், நடந்த சம்பவம் குறித்து, தன்னுடைய பெற்றோரிடம் கதறி அழுது சொல்லி உள்ளான்... இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர், போலீசில் புகார் தந்தனர்.. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிரியாரிடம் விசாரணையை நடத்தினர். ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, சிறுவனுக்கு ஓயாமல் டார்ச்சர் கொடுத்தது தெரியவந்தது.

ஸ்டேஷன்

ஸ்டேஷன்

இதையடுத்து, பாதிரியார் ஜோசப் கைது அதிரடியாக செய்யப்பட்டார்... இவர் இதற்கு முன்பு எத்தனை பேரை இப்படி, பாலியல் டார்ச்சர் தந்தார்? வேறு யாராவது இவரிடம் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து இவரிடம் விசாரிப்பதற்காக, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். ஆனால், திடீரென வழியிலேயே மயங்கிவிழுந்தார் பாதிரியார்.. பிறகு, போலீசார் அவரை உடனடியாக சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும், ஜோசப்பை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனராம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+