நைசாக பேசி வலைவிரித்த ஆண்.. கவிழ்ந்த "லாட்டரி லேடிஸ்".. கேரளாவில் 2 பெண்கள் நரபலி.. எப்படி நடந்தது?
திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் அந்த பெண்கள் இருவரும் எப்படி நரபலி கொடுக்கப்பட்டனர் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பத்மா மற்றும் ரோஸ்லி. இவர்கள் இருவருமே அங்கு லாட்டரி சீட்டு விற்று வந்துள்ளனர்.
இவர்களிடம் ஆண்கள்தான் அதிகம் லாட்டரி வாங்குவார்கள் என்பதால் ஆண்களிடம் இவர்கள் சகஜமாக பேசி பழகி உள்ளனர்.

நரபலி
இந்த நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் பத்மா திடீரென மாயமாகி உள்ளார். இரண்டு மாதம் கழித்து ஆகஸ்டில் ரோஸ்லி மாயமாகி உள்ளார். இரண்டு பேருமே அடுத்தடுத்து காணாமல் போனது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே ஏரியாவில் லாட்டரி விற்கும் இரண்டு பெண்கள் காணாமல் போனது போலீசாருக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

எர்ணாகுளம்
இரண்டு பேருமே எர்ணாகுளம் ரயில் நிலையத்தில்தான் லாட்டரி விற்றுள்ளனர். இந்த நிலையில் இரண்டு பெண்களின் போன் ரெக்கார்டை வைத்து அவர்கள் முகமது ஷாபி என்ற இளைஞரிடம் பேசி வந்ததை கண்டுபிடித்தனர். இதில் பத்மா தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சொந்த ஊர் தருமபுரி. இந்த இரண்டு பெண்களும் முகமது சாபி என்ற இளைஞரிடம் பேசியது பின்னர் சிசிடிவி கேமராக்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டது.

சாபி
இந்த நிலையில் சாபிதான் இவர்கள் இருவரையும் கனெக்ட் செய்யும் புள்ளி என்பது தெரிய வந்துள்ளது. இவரை கண்டுபிடித்த போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு பெண்களையும் நரபலி கொடுத்தது தெரிய வந்துள்ளது. பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக இந்த நரபலி நடந்துள்ளது.

எப்படி நடந்தது?
இவர்களின் வீட்டிற்கு அருகில்தான் பத்மாவின் உடல் கிடைத்துள்ளது. அந்த உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தது. இன்னொரு பெண்ணான ரோஸ்லி உடல் முழுவதாக எரிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இவர்களை எப்படி நரபலிக்கு அழைத்து வந்தேன் என்று சாபி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இரண்டு பெண்களுக்கும் வேலை கொடுப்பதாக சாபி கூறியுள்ளார். முதலில் அந்த பெண்கள் மறுத்துள்ளனர்.

வீடியோ
பின்னர் இது வீடியோவில் லாட்டரி விற்பது போன்ற ஒரு காட்சிக்கான வீடியோ. இதற்கு 10 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறி அந்த பெண்களை அழைத்துள்ளார். அவர்களை பகவான் சிங் வீட்டிற்கு அழைத்து சென்று, பின்னர் கட்டிப்போட்டு, நரபலி கொடுத்துள்ளனர். முதல் பெண்ணை ஜூன் மாதமும், இரண்டாவது பெண்ணை செப்டம்பர் மாதமும் நரபலி கொடுத்துள்ளனர். இதில் ரோஸ்லி உடலை மட்டும் எரித்து, சாம்பலாக்கி பூஜை எல்லாம் செய்துள்ளனர்.

சாகிப்
சாகிப் என்ற இளைஞர்தான் பகவான் சிங்கை தொடர்பு கொண்டு நரபலி பற்றி பேசி உள்ளார். பகவான் சிங் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவது தெரிந்து பேஸ்புஸ்க்கில் அவரை சாகிப் தொடர்பு கொண்டு பேசி, நரபலி கொடுப்பது பற்றி அறிமுகம் கொடுத்துள்ளார். அவர்தான் பின்னர் சாபியின் தொடர்பு எண்ணை கொடுத்து பேசி உள்ளார். இப்படித்தான் சாபி, பகவான் சிங்கையும், அவரின் மனைவியையும் சந்தித்துள்ளார்.

லாட்டரி சீட்டு
பகவான் சிங் மிகவும் பொருளாதார கஷ்டத்தில் இருந்துள்ளார். இதையடுத்து.. நரபலி கொடுங்கள். உங்களுக்கு கோடி, கோடியாக பணம் கொட்டும் என்று சாகிப் ஆசை காட்டி உள்ளார். பின்னர் நேரில் பேசிய சாபியும் இதே போல ஆசை காட்டி உள்ளார். அதன்பின்தான் இவர்கள் நரபலிக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டு பெண்களை, குறிப்பிட்ட இடைவெளியில் நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறி, இந்த இரண்டு பெண்களையும் நரபலி கொடுத்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications