Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாபநாசம்" பாணியில் ஒத்திகை.. குளத்தில் கிடந்த "அந்த" பொருள்.. பாய்சன் காதலியின் லீலைகள்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த காதலனுக்கு காதலி ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தரும் விவரங்கள் பல வெளியாகி உள்ளன.

கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். 23 வயதே ஆன இவர் கல்லூரி படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கிரீஷ்மா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரீஷ்மாதான் தனது காதலன் ஷாரோனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

காதல்

காதல்

இவர்கள் இருவரும் கல்லூரியில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். ஆனால் இதை கிரீஷ்மா வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து கிரீஷ்மா வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். பெரிய பணக்கார குடும்பம் ஒன்றில் இருந்து வரன் வந்திருக்கிறது. இதையடுத்து கிரீஷிமா காதலனை விட்டுவிட்டு அந்த நபரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். பணக்கார மாப்பிள்ளை என்றதும் காதலை விட ஒப்புக்கொண்டு உள்ளார்.

கொலை

கொலை

ஆனால் அப்போது அந்த பெண்ணுக்கு ஜாதகம் பார்த்த போது முதல் கணவர் எப்படியும் இறந்துவிடுவார் என்று எச்சரித்து உள்ளனர். இதனால் பணக்கார கணவர் இறந்து போனால் எதிர்காலம் நாசமாகிவிடும் என்று அந்த பெண், தனது காதலனையே முதலில் திருமணம் செய்துள்ளார். தனது காதலன் இறந்தால் பிரச்சனை இல்லை. அவனுக்கு காசு இல்லை. அதனால் அவனையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார் கிரீஷ்மா. ஷாரோன் ராஜை தனது பெற்றோர்கள் முன்னிலையில் சம்பிரதாயத்திற்கு கிரீஷ்மா திருமணம் செய்துள்ளார்.

திருமணம்

திருமணம்

எப்படியும் ஷாரோன் ராஜ் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் கிரீஷ்மா திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் எப்போது இறப்பார் என்று கிரீஷ்மாவிற்கு தெரியவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். கஷாயத்தில் விஷம் கொடுத்து கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முன்னதாகவே கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து இவர் கொடுத்துள்ளார். அதன்பின் மொத்தமாக கஷாயத்தில் விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.

கொடூர கொலை

கொடூர கொலை

இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி போலீசார் இந்த வழக்கில் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்ட போதும் தொடக்கத்தில் அந்த பெண்ணை அழைத்து விசாரிக்கவில்லை. காவல் நிலையத்திற்கு பெண்ணை அழைத்து விசாரிக்காமல் இருந்துள்ளனர். பெண் என்பதால், அவர் கொலை செய்தும் கூட போலீசார் சலுகை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது,

மெத்தனம்

மெத்தனம்

இதை அம்மாநில அமைச்சர் அந்தோணிராஜ் கண்டித்து உள்ளார். இப்படி மெத்தனம் காட்டுவது தவறு. அந்த பெண் தலைமறைவாகி இருந்தால் என்ன செய்வீர்கள்? காவல்துறை மீது இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். இந்த வழக்கில் வேறு சில முக்கிய விவரங்களும் வெளியாகி உள்ளன. அதன்படி கிரீஷ்மா தொடக்கத்தில் இருந்தே ஷாரோனை ஏமாற்றி வந்துள்ளார். திருமணம் செய்யும் போதே கொலைக்கான திட்டங்களும் போடப்பட்டு உள்ளன.

வழக்கு திருப்பம்

வழக்கு திருப்பம்

அதாவது இவர்களுக்கு இடையில் வீட்டில் திருமணம் நடந்த போதே.. அவரின் பெற்றோர்களுடன் சேர்ந்து கொலைக்கான திட்டங்களும் போடப்பட்டு உள்ளன. வயிற்று வலி காரணமாக கஷ்யாம் கொடுத்தோம் என்ற வாதத்தை வைக்க இவர்கள் தயாராக இருந்துள்ளனர். திருஷ்யம், பாபநாசம் படங்களில் வருவது போல கொலைக்கு முன்பாக மிக சமர்த்தியமாக திட்டம் போட்டுள்ளனர். போலீசிடம் என்ன பேச வேண்டும் என்று திட்டம் போட்டு இருக்கிறார்கள்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

யார் என்ன வாக்குமூலம் கொடுக்க வேண்டும். யார் எதை சொல்ல கூடாது என்றும் ஒரு ஒரு கதை போல டைம் லைன் ஏற்பாடு செய்துள்ளனர். தொடக்கத்தில் இவர்களின் வாக்குமூலம் போலீசுக்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்தான் இவர்களின் வாட்ஸ் ஆப் சாட் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ் ஆப் சாட் மூலம்தான் அந்த பெண் குற்றவாளி, அவர்தான் விஷம் கொடுத்தார் என்ற க்ளூ போலீசாருக்கு கிடைத்துள்ளது.

குளம்

குளம்

இந்த நிலையில் போலீசார் அந்த பெண்ணின் வீட்டின் பின்புறத்தில் நடத்திய சோதனையில் பாய்சன் பாட்டில் கிடைத்தது. அங்கு இருந்த குளத்தில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். குளத்தில் பாய்சன் பாட்டில் மிதந்து கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கே கஷாயம் கொடுக்கப்பட்ட பாட்டில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு தாய் மாமன், அம்மா ஆகியோரும் உடந்தையாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+