"என்றும் இளமையாக இருக்க".. நரபலி கொடுத்த பிறகு நரமாமிசம் சாப்பிட்ட கேரளா தம்பதி.. விசாரணையில் பகீர்
திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழக பெண் உள்பட இரு பெண்களை நரபலி கொடுத்த சம்பவத்தில் அவர்களது மாமிசத்தை பச்சையாக உண்டதாக கைது செய்யப்பட்ட லைலா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் எலாந்தூர் கிராமத்தில் கடவந்தரா பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின். இவருக்கு 50 வயதாகிறது. இவர் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியை சேர்ந்த பகவந்த் சிங், அவரது மனைவி லைலா, முகமது ஷபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை
இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பதைபதைக்கும் தகவல்களை இவர்கள் கொடுத்துள்ளனர். செப்டம்பர் மாதம் மாயமான பெண் ரோஸ்லினை நரபலி கொடுத்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை அந்த மூவரும் தெரிவித்தனர். மேலும் ஏற்கெனவே ஜூன் மாதம் பத்மா என்ற பெண்ணையும் நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

தருமபுரி மாவட்டம்
பத்மா தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கணவர் ரங்கனுடன் நீண்ட காலமாக கேரளாவில் தங்கி தோட்ட வேலை செய்து வருகிறார். பகவந்த் சிங் திருவல்லா பகுதியில் மசாஜ் சிகிச்சை அளிக்கும் மருத்துவர். இவரது மனைவி லைலாவுக்கு முகமது ஷபி என்பவர் பழக்கமாகியுள்ளார்.

டாக்டர் தம்பதி
இந்த நிலையில் டாக்டர் தம்பதிக்கு குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக ஆசைப்பட்டனராம். பணக்காரர்களாக நரபலி கொடுத்தால்தான் என முகமது ஷபி ஐடியா கொடுத்துள்ளார். இதை நம்பிய டாக்டர் தம்பதி உடனடியாக அதற்கான ஆட்களை அழைத்து வருமாறு முகமது ஷபியிடம் தெரிவித்துள்ளனர்.

முகமது ஷபி
இதையடுத்து முகமது ஷபிக்கு ரங்கன் மனைவி பத்மாவும் ,ரோஸ்லினும் பழக்கம். அந்த பழக்கத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் தனித்தனியே வெவ்வேறு நாட்களில் முகமது ஷபி டாக்டரின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு பெண்களின் கழுத்தை அறுத்து நரபலி கொடுக்கப்பட்டு அவர்களது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது.

லைலாவிடம் விசாரணை
இந்த நிலையில் லைலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்ட இருவரது உடல்களையும் அவர்கள் வீட்டில் ஒரு அறையில் வைத்திருந்தனர். நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல் மாமிசத்தை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் இருக்கலாம் என முகமது ஷபி கூறினாராம்.

ரோஸ்லின் விலா எலும்பு
இதையும் நம்பிய டாக்டர் தம்பதி ரோஸ்லினின் விலா எலும்பு பகுதியை சாப்பிட்டனராம். மேலும் இருவரை பலி கொடுத்ததற்காக லைலா மனம் வருந்தவே இல்லையாம். நரபலி கொடுத்தால் பணக்காரர்கள் ஆகலாம் என லைலா இன்னமும் நம்பி கொண்டிருக்கிறாராம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications