சுட சுட இட்லி தொண்டையில் சிக்கி.. அதுவும் மூணு.. மூச்சுவிட முடியாமல் திணறிய நபர்.. அப்பறம் என்னாச்சு?
திருவனந்தபுரம்: இட்லி சாப்பிட்ட லாரி டிரைவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை கேரளாவில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. பண்டிகை நாளில் இப்படியொரு நிகழ்வு, பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கஞ்சிக்கோடு கொல்லப்புரா என்ற இடத்தில், இளைஞர் அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த அமைப்பின் சார்பில் ஓணம் விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த விழாவில், கயிறு இழுக்கும் போட்டி, சாப்பாட்டு போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.. எனவே, சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமானோர் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.. அந்தவகையில், சாப்பாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கலந்து கொண்டார்.. 50 வயதான சுரேஷ், டிப்பர் லாரி டிரைவர் ஆவார்.
இட்லி ஆர்வம்: இந்த போட்டியில், குறிப்பிட்ட நேரத்தில் அதிக இட்லி சாப்பிடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.. போட்டி ஆரம்பித்ததுமே அனைவருமே இட்லியை வேக வேகமாக சாப்பிட தொடங்கினார்கள்.. சுரேஷூம் இட்லியை ஆர்வத்துடன் சாப்பிட்டார்.. அப்போது திடீரென சுரேஷின் தொண்டையில் இட்லி சிக்கிக்கொண்டது.
இதில் மூச்சுச் திணறி, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை வாளையாரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரிதாப சுரேஷ்: இது குறித்து சுள்ளிமடை வார்டு உறுப்பினர் மின்மினி சொல்லும்போது, ஒரேநேரத்தில் மூன்று இட்லிகளை ஒன்றாக விழுங்க முயன்றார் சுரேஷ்.. அப்போது இட்லி தொண்டையில் சிக்கியது. அந்த இட்லியை விழுங்க எவ்வளவோ முயற்சித்துள்ளார்.. அப்போதுதான் மூச்சுவிட முடியாமல் திணறிவிட்டார்.
உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. பிறகு அங்கிருந்து வாளையாறில் உள்ள இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்றார்.
கொடுமை: பரோட்டா சாப்பிடுவது, இட்லி சாப்பிடுவது, பிரியாணி சாப்பிடுவது என போட்டிகள் நடத்தப்படுவது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.. பணத்துக்கும் பரிசுக்கும் ஆசைப்பட்டு, மக்கள் இதில் பங்கேற்பதும் தொடர்ந்தபடியே உள்ளது.. இத்தகைய போட்டிகளை நடத்துவோர் மீதும், அதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் மீதும் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications