கேரளாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. எந்த ரூட்டில் தெரியுமா?
திருவனந்தபுரம்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆண்டுக்குள் மொத்தம் 10 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தெற்கு ரயில்வேயில் கேரளாவில் அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு இந்த முதல் ரயில் இயக்கப்பட உள்ளது.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்களில் புதுப்புது அப்டேட்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பல்வேறு சொகுசு வசதிகள் நிறைந்த வந்தே பாரத் ரயில்களை கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில்வே அறிமுகம் செய்தது. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
தற்போது 136 வந்தே பாரத் ரயில்கள் மூலம் நாடு முழுவதும் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கூட 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல் டூ மைசூர், கோவை டூ விஜயவாடா, ழும்பூரில் டூ நெல்லை மற்றும் எழும்பூர் டூ நாகர்கோவில் என 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்ட அதே சமயத்தில், சில குறைகளையும் பயணிகள் கூறி வந்தனர்.
படுக்கை வசதி இல்லாதது பயணிகளிடையே பெரும் குறையாகவே பார்க்கப்பட்டது. சென்னையில் இருந்து குமரி வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கூட படுக்கை வசதி இல்லாதது பயணிகளுக்கும் ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்த நிலையில் தான் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டது. இதற்காக அதி நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப்பில் நடந்து வந்தது.
10 ரூட்களில் ரயில்கள்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இதில் 180 கிமீ வேகத்தில் இந்த ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது. சோதனை ஓட்டமும் வெற்றி பெற்ற நிலையில் வந்தே பாரத் ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என பயணிகள் எதிர்பார்த்தனர். அதேபோலவே இந்த ஆண்டுக்குள் மொத்தம் 10 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே தெரிவித்து இருந்தது.
மொத்தம் 10 ரூட்கள் என்பதால், தெற்கு ரயில்வேயில் எத்தனை வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் சென்னை டூ குமரிக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படுமா? என்றும் பயணிகள் எதிர்பார்த்தனர். இந்த வழித்தடம் பரிசீலனையில் இருக்கிறது என்றும் ஆனால் எப்போது இயக்கப்படும் என்பதை ரயில்வே பின்னர் அறிவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பதை ரயில்வே தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும்
கேரளா மாநிலத்திற்கு தான் நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என ரயில்வே திட்டமிட்டுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து இந்த முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் கேரள மாநிலத்திற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றே சொல்லலாம். கேரள ரயில் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எப்போது இயக்கப்படும்? என்ற தகவல் வெளியாகவில்லை.
திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். 823 பயணிகள் பயணம் செய்ய முடியும். ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட 11 பெட்டிகளும், இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு பெட்டி இருக்கும். தற்போது கேரளாவில் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூர் சென்ட்ரல் (வண்டி எண் 20632 ), திருவனந்தபுரம் சென்ட்ரல் - காசர்கோடு (20634), மங்களூர் சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் (20631), மற்றும் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் (20633) வரை என 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
என்னென்ன வசதிகள் இருக்கும்?
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில், அவசர காலங்களில் பயணிகள், ரயில் மேலாளர், லோகோ பைலட் இடையேயான தகவல் தொடர்புக்கான அவசரமாக பேசுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு கருவிகள், அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, செக்யூரிட்டி கேமரா, பயோ டாய்லட் ஆகிய வசதிக்ளும் உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு படுக்கைகள், டாய்லட்கள், சென்சார் வசதி கொண்ட கதவுகள், தானியங்கி வெளிப்புற கதவுகள் என பல வசதிகள் உள்ளது. பர்ஸ்ட் கிளாஸ் ஏசி பெட்டியில் பயணிகள் குளிப்பதற்காக ஹீட்டர் வசதி உள்ளது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications