இலங்கை ஈஸ்டர் அட்டாக் போலவே பிளானிங்? கேரளா கிறிஸ்துவ நிகழ்வில் குண்டுவெடிப்பு.. நடந்தது என்ன?
திருவனந்தபுரம்: கேரளா எர்ணாகுளத்தில் கிறிஸ்துவ நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு போலவே நிகழ்த்தப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. அங்கு அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இது தொடர்பாக அவர்கள் வீடியோவும் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது யூசுப் இப்ராஹிம் என்பவரின் குடும்பம் விசாரிக்கப்பட்டது. டிபன் பாக்ஸ் குண்டு மூலம் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டது.
கேரளா தாக்குதல்: கேரளாவில் கிறிஸ்துவ நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு போலவே நிகழ்த்தப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
Jehovah's Witnesses என்ற கிறிஸ்துவ பிரிவை சேர்ந்தவர்கள் நடத்திய ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நடத்த இடத்தில் 2000 பேர் வரை கூடி இருந்தனர். வெடிகுண்டு படை, தடயவியல் குழு மற்றும் என்ஐஏ குழு ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அதே நேரத்தில் கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கேரளா டிஜிபி ஷேக் தர்வேஷ் அளித்த பேட்டியில், கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என்பது உறுதி ஆகி உள்ளது. 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்தது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை செய்து வருகிறது. இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.
கிறிஸ்தவப் பிரிவினர் அமைப்பு: Jehovah's Witnesses அல்லது யெகோவாவின் சாட்சிகள் ஒரு கிறிஸ்தவப் பிரிவினர் அமைப்பு ஆகும். ஆனால் இவர்கள் பரிசுத்த திரித்துவத்தில் (தந்தை, குமாரன் (இயேசு கிறிஸ்து) மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று சம நபர்களில் நம்பிக்கையற்றவர்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை "பரலோகத்தில் உள்ள கடவுளின் ராஜ்யத்தின் ராஜா" என்று நம்புகிறார்கள், ஆனால் இயேசுவை சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் பைபிளின் உரையை மட்டுமே முழுமையாக நம்ப கூடியவர்கள். Jehovah's Witnesses பிரிவை சேர்ந்தவர் கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர் கொண்டாடுவதில்லை, ஏனென்றால் இதுபோன்ற பண்டிகைகளை அவர்கள் நம்புவதில்லை.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications