கே.சிவன் குறித்து விமர்சனம்..சர்ச்சையை கிளப்பிய சுயசரிதை..இஸ்ரோ தலைவர் சோம்நாத் எடுத்த அதிரடி முடிவு
திருவனந்தபுரம்: நான் இஸ்ரோ தலைவராக வருவதை கே.சிவன் தடுக்க முயற்சித்ததாக ஒருபோதும் கூறவில்லை என்றும் தவறாக புரிந்து கொண்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும் சுயசரிதையை வெளியிடுவதை நிறுத்திவைப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(ISRO) தலைவராக தற்போது சோம்நாத் பதவி வகித்து வருகிறார். கேரளா மாநிலத்தை சேர்ந்த சோம்நாத் கடந்த ஆண்டு இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றார். சோம்நாத்திற்கு முன்பாக இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே சிவன் ஆவார். இவரது பதவிக்காலத்தில் சந்திரயான் 2 திட்டமானது நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்டது.
அதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது நிலவின் தரை பரப்பில் மோதி சிதறியது. சந்திரயான் 2 திட்டம் சற்று பின்னடவை சந்தித்தது. இருந்த போதிலும் நிலவின் தென் துருவத்திற்கு செல்லும் அளவுக்கு குறைந்த செலவில் செயற்கைகோள் செலுத்தியது இஸ்ரோவுக்கு உலக அளவில் பெருமையை சேர்த்தது. தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச நாடுகளையும் இஸ்ரோ தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சோம்நாத் சுயசரிதை: தற்போது இஸ்ரோவின் தலைவராக இருக்கும் சோம்நாத், 'நிலவு குடிச்ச சிங்கங்கள்' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார் . இவர் தான் எழுதிய புத்தகத்தில்தான் சிவன் குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார். தனது சுயசரிதை புத்தகத்தில் சோம்நாத் கூறியிருப்பதாவது:- எனக்கும் சிவனுக்கும் 60 வயது நிறைவடைந்தவுடன் எங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
பதவியை நீட்டிக்க முயற்சித்தார்: அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக இருந்த ஏ.எஸ்.கிரண்குமார் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிறகு எங்கள் இருவரின் பெயர்களும் இஸ்ரோ தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இஸ்ரோ தலைவர் பதவி எனக்கு கிடைக்கும் என நான் நம்பியிருந்த நிலையில் அந்த பதவி சிவனுக்கு கொடுக்கப்பட்டது. இஸ்ரோ தலைவரான பிறகு சிவன், அதற்கு முன்பு வகித்து வந்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை.
விக்ரம் சாராபாய் பதவி குறித்து சிவனிடம் நான் கேட்டும் அவர் பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பிவிட்டார். அந்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பி.என். சுரேஷின் தலையீட்டை அடுத்து 6 மாதங்கள் கழித்து அந்த பதவிக்கு நான் நியமிக்கப்பட்டேன். இஸ்ரோ தலைவராக 3 ஆண்டுகள் சேவைகளை செய்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு பதிலாக சிவன் தனது பதவியை நீட்டிக்கவே முயற்சித்தார்.
சுயசரிதை வெளியிடவில்லை: என்னை தலைவராக்கக் கூடாது என்பதற்காகவே விண்வெளி ஆணையத்தில் யாரை தலைவராக்குவது என்ற ஆலோசனைக்கு யு.ஆர். ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநரை விட்டு தேர்வு செய்தார்கள் என நான் கருதுகிறேன். இதைத் தொடர்ந்து சந்திரயான் 2 நிலவில் செலுத்திய போது பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க என்னை அழைத்து செல்லாமல் ஒதுக்கியே வைத்தனர்" என பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம் பெற்று இருந்தன.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனை டார்கெட் செய்து இடம் பெற்று இருந்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்திவைப்பதாக சோம்நாத் கூறியுள்ளார். இது தொடர்பாக சோம்நாத் கூறுகையில், " நான் இன்னும் எனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடவில்லை. புத்தக வெளியீட்டாளர்கள் இந்த புத்தகத்தின் சில காப்பிகளை வெளியிட்டு இருக்கலாம் என கருதுகிறேன்.
வருத்தம் அளிக்கிறது: புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்தி வைக்குமாறு நான் கூறியுள்ளேன். இந்த புத்தகத்தை வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்து பிறகு முடிவு செய்வேன். இளைஞர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் என்ற நோக்கத்தில் தான் புத்தகத்தை எழுதினேனே தவிர யாரையும் டார்கெட் செய்து எழுதவில்லை.
கே.சிவனை இது மிகவும் காயப்படுத்தி இருக்கும் என்பது எனது வருத்தம் அளிக்கிறது. ஒரு தலைவராக அவர் முன் பல விருப்பங்கள் இருந்து இருக்கும். அவரது அதிகாரத்தை நான் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை. எனது வருத்தம் குறித்த கேள்வியை மட்டுமே இருந்ததே தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications