அன்ரிசவ்டு டிக்கெட் எடுத்து ஏசி பெட்டியில் பயணம்.. காஞ்சிபுரம் இளைஞரை கொன்ற ரயில்வே ஊழியர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேரந்த சரவணன் கோபி என்ற இளைஞர், கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள உறவினரை பார்க்க ரயிலில் சென்றுள்ளார். அவர் பொது பெட்டியில் பயணிக்க டிக்கெட் எடுத்துவிட்டு ஏசி பெட்டியில் ஏறி பயணித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை கீழே இறங்க ரயில்வே ஊழியர் வலிறுத்தினாராம். ஆனால் சரணவனன் கோபி இறங்க மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ரயில்வே ஊழியர் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.

பொதுவாக ரயில்களில் அன்ரிசர்வ்டு பெட்டிகளில் டிக்கெட் எடுத்துவிட்டு, ஏசி பெட்டிகளிலோ அல்லது படுக்கை வசதி பெட்டிகளிலோ பயணிக்கக்கூடாது. அப்படி பயணிக்க முயன்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவார். இறங்க மறுத்தால், காவல்துறையிடம் கூறி, அவர்களை பலவந்தமாக வெளியேற்றுவார்கள்.

train kanchipuram railway

அதையும் மீறி வெளியேற மறுத்தால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியும் அல்லது அபராதம் விதிக்க முடியும். இதுதான் சட்ட நடைமுறை. ஆனால் சில சமயங்களில் பொது டிக்கெட்டில் டிக்கெட்டு எடுத்துவிட்டு, ஏ.சி. பெட்டியில் பயணிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களை ரயில்வே ஊழியர்கள் வெளியேற்றுவதற்காக கீழே தள்ளிவிடுகிறார்கள். இதில் பரிதாபமாக ரயில் பயணி இறந்து போய் இருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதாகும் சரவணன் கோபி என்பவர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக, மங்களூரு-கொச்சுவேலி சிறப்பு ரயிலில் கடந்த அக்டோபர் 12-ந்தேதி பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பொது பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் பொதுப்பெட்டியில் பயணிக்காமல், ஏ.சி. பெட்டியில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது ரயில்வேயில் தனியார் ஏஜென்சி ஊழியராக பணிபுரிந்து வரும் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதாகு அனில் குமார் என்பவர், ஏ.சி. பெட்டியில் உள்ள பயணிகளுக்கு தலையணை, போர்வை வழங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் பொது டிக்கெட் எடுத்து விட்டு ஏ.சி. பெட்டியில் பயணித்த சரவணன் கோபியை கீழே இறங்குமாறு கூறியிருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இரவு 11.15 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்போது, ஓடும் ரெயிலில் இருந்து சரவணன் கோபியை அனில் குமார் கீழே தள்ளி விட்டார். இதில் சரவணன் கோபி நடைபாதையில் விழாமல், நடைபாதையையொட்டி உள்ள தண்டவாளத்தில் விழுந்து உள்ளார். அவர் மீது ரயில் சக்கரம் ஏறி இறங்கியது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே ரயில் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் சரவணன் கோபியை மீட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக பெண் பயணி தந்த தகவலின்பேரில், அனில் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் அனில் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+