Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஎப்ஐ, எஸ்டிபிஐயுடன் தொடர்பு.. பாஜக தலைவரை கொன்ற 15 பேருக்கு தூக்கு தண்டனை.. கேரளா கோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி ஆழப்புழா மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள். மேலும் ஒரே நேரத்தில் 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாசன். வழக்கறிஞரான இவர் பாஜகவில் செயல்பட்டு வந்தார். பாகவின் ஓபிசி அணியின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் தான் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி ரஞ்சித் சீனிவாசன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Kerala Allappuzha court sentences 15 convicts to death for murder of BJP leader Ranjith Srinivasan

ஆழப்புழாவில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் அவரை கொடூரமாக கொலை செய்தனர். வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்முன்னே இந்த கொடூர கொலை என்பது நடந்தது. இந்த சம்பவம் கேரளாவை உலுக்கியது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ரஞ்சித் சீனிவாசன் கொலையானது எஸ்டிபிஐவை சேர்ந்த கேஎஸ் ஷான் என்பவர் கொலை செய்யப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில் நடந்தது. இதனால் ரஞ்சித் சீனிவாசன் கொலைக்கும், கேஎஸ் ஷான் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த விசாரணையின்போது ரஞ்சித் சீனிவாசன் கொலை தொடர்பாக நிஜாம், அஜ்மல், அனூப், எம்டி அஸ்லாம், சலாம், அப்துல் கலாம், சஃபாருதீன், முன்ஷாத், ஜசீப், நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி மற்றும் ஷாம்னாஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கு என்பது ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாராவில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைதான 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்தியாவை பொறுத்தமட்டில் தூக்கு தண்டனை என்பது அனைத்து வழக்குகளுக்கும் வழங்கப்படுவது இல்லை. சில வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என்பது வழங்கப்படும். இத்தகைய சூழலில் தான் ஒரே வழக்கில் 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி கேரளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு என்பது அரிதானதாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்திய வரலாற்றில் ஒரே வழக்கில் அதிகமானவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு என்றால் அது அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தான். 2008ல் அகமதாபாத்தில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. இந்த வழக்கில் மொத்தம் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த 2022ல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதற்கு முன்பாக முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு என்பது 1999ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு அடுத்தப்படியாக இப்போது 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் 3வது பெரிய மரண தண்டனை வழக்காக பார்க்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+