கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்?
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் என இரண்டுமே இறங்கி வேலை செய்து வரும் சூழலில் போட்டி மிகக் கடுமையாக மாறியிருக்கிறது. இதற்கிடையே அங்கு ஒரு சில ஆயிரம் வாக்காளர்களே ஆட்சிக்கு வருவது யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.
கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாகவே பினராயி விஜயன் முதல்வராக இருந்து வருகிறார். அங்கு இடதுசாரி அரசு நடந்து வருகிறது. இந்த முறை பினராயி அரசு மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் களமிறங்குகிறது.

கேரளா தேர்தல்
இதனால் இரு தரப்புமே இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த முறை கேரளாவில் மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்றே தெரிகிறது. பாஜகவின் என்டிஏ கூட்டணியும் கூட கணிசமான வாக்கு வங்கியைப் பெற்றிருந்தாலும் கூட நேரடி போட்டி என்பது இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (LDF) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF) இடையே தான் நடக்கிறது.
கடும் போட்டி
சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட இதையே தான் காட்டுகிறது. முதலில் வெளியான மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் (Matrize-IANS) சர்வேயில் இடதுசாரி கூட்டணி 61- 71 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 58 முதல் 69 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 தொகுதிகள்
மாத்ருபூமி சர்வேியலும் கிட்டத்தட்ட இதேதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் LDF சுமார் 66 இடங்களில் வெல்லும் எனக் கூறியுள்ளனர். அதாவது தற்போதுள்ள இடங்களுடன் ஒப்பிடுகையில் 32 முதல் 37 இடங்களை இழப்பார்களாம். அதேபோல எதிர்க்கட்சியான UDF சுமார் 62 இடங்களையும் வெல்லக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.. அதாவது காங்கிரஸ் கூட்டணி தற்போதுள்ள இடங்களை விடக் கூடுதலாக 20 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருக்கிறதாம். மொத்தம் 12 தொகுதிகளில் இழுபறி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பர்கள் கொஞ்சம் மாறினாலும் கூட இப்படி தான் பெரும்பாலான சர்வேக்களில் அங்கு கடும் போட்டி நிலவுவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வாக்குகள்
பிராந்தியம் வாரியாக பார்க்கும்போது மத்திய கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. தெற்கு கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணியின் கை ஓங்கியிருக்கிறது. அதேநேரம் வடக்கு கேரளாவில் தான் போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. இரு தரப்பிற்குமே செல்வாக்கு சரிசமமாக இருப்பதால் அங்குள்ள மக்களே ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். அதிலும் கடும் போட்டி நிலவும் 10 முதல் 12 தொகுதிகளில் உள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள்.. யாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்கிறார்கள் என்பதே முக்கியமாக இருக்கும். அந்த சில ஆயிரம் வாக்குகளே கேரளாவில் தலையெழுத்தைத் தீர்மானிக்கும்.
கேரளாவைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. அதில் 71 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். கடந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி 99 இடங்களில் வென்றது. குறிப்பாக சிபிஎம் 62ஐ கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணி அந்த தேர்தலில் 41ல் மட்டுமே வென்றது. குறிப்பாகக் காங்கிரஸ் வெறும் 22 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!











Click it and Unblock the Notifications