கேரளா குண்டுவெடிப்பு.. மக்களின் பாலஸ்தீன் ஆதரவை திசை திருப்ப சதி -பயங்கரவாதம் என சொல்லும் ஆளுங்கட்சி
திருவனந்தபுரம்: கொச்சி அருகே பிரார்த்தனை கூடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அம்மாநில ஆளுங்கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் இந்த விவகாரத்தில் புதிய கோணத்தை முன்வைத்து இருக்கிறார்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்து உள்ள களமச்சேரி. கொச்சியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் இப்பகுதியில் உள்ள சாம்ரா என்ற பிரார்த்தனைக் கூடத்தில் இன்று காலை 10 மணி அளவில் யெகோவாவின் சாட்சிகள் என்ற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சுமார் 2,200 பேர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனர். அனைவரும் கண்களை மூடி இறை வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதன் காரணமாக அந்த பிரார்த்தனைக் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரார்த்தனையில் பங்கேற்ற மக்கள் பதறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஒடினர். இந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 10 பேருக்கு பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், அதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு மற்றும் கூட்ட நெரிசலால் 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள கேரளாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், "களமசேரி பிரார்த்தனைக் கூடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு என்பது பாலஸ்தீன் பிரச்சனையை திசை திருப்புவதற்காக நடத்தப்பட்டதாக இருக்கும். கேரள மக்கள் தாங்களாக முன் வந்து போரால் பாதிக்கப்பட்டு உள்ள பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனவே மக்கள் கவனத்தை திசை திருப்ப இது நட்த்தப்பட்டு இருக்கலாம். இந்த தாக்குதலை கண்டிக்கிறேன். அரசியல் ரீதியாக பார்த்தால் இதுபோன்ற சம்பவங்கள் பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு அங்கம்." என்றார்.
இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளதாவது, "துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்து இருக்கிறது. கூடுதல் தகவல்களை திரட்டி வருகிறது. டிஜிபி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். முழுமையான விசாரணைக்கு பிறகே கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும்." என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications