குடியுரிமை சட்டத்திருத்தம்.. திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகம்
Recommended Video
திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகம் மேற்கொண்டு வருகிறார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்தியாவில் குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இந்த நிலையில் இந்த மசோதாவில் இடம்பெற்ற 6 மதத்தினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் முஸ்லிம்களின் பெயர் இல்லை. இதுவும் இந்த மசோதாவை எதிர்க்க முக்கிய காரணமாகும்.

போர்க்களம்
மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அது போல் தெற்கு டெல்லியிலும் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டம் போர்க்களமாக மாறியது.

அழைப்பு
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் சத்தியாகிரக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தியாகிகள் நினைவுத்தூண் அருகே போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை சட்டம்
பினராயி விஜயன் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டவை போராட்டத்தில் பங்கேற்றன. இந்த போராட்டத்தில் பினராயி விஜயன் பேசுகையில் கேரளாவில் மதசார்பற்ற மற்றும் ஜனநாயக ரீதியிலாக அனைவரும் ஒன்றிணைந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.
|
ஹேஷ்டேக்
நாம் எதிர்ப்போம், நான் எதிர்த்துதான் ஆக வேண்டும் என்ற இரு கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. #WeWillResist என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications