ஈரக்குலை உதறுதே.. "இருய்யா நாங்களும் வர்றோம்".. நொய்யல் ஆற்றங்கரைக்கு ஓடிய தம்பதி.. அந்த பெல்ட்?
திருவனந்தபுரம்: ஒரே மகனின் பிரிவை தாங்க முடியாமல் தவித்து வந்தனர் பெற்றோர்.. மகன் இறந்து ஒரு வருடம் ஆகியும், இயல்பு நிலைமைக்கு வரமுடியாமல், சகஜமாக யாருடனும் பேசவும் முடியாமல், கண்ணீரில் தத்தளித்து கிடந்தார்கள் இந்த தம்பதியினர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சினேகா தேவ். இவரது மனைவி ஸ்ரீலதா... இவர்களுக்கு ஒரே மகன் ஸ்ரீதேவ்.. இவர் கல்லூரியில் படித்து வந்தார்.. கடந்த வருடம் திடீரென ஏற்பட்ட விபத்து ஒன்றில், ஸ்ரீதேவ் சிக்கி இறந்துவிட்டார்..

ஒரே செல்ல மகன்: இந்த மரணத்தை தம்பதிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை.. தங்களுக்கு இருந்த ஒரே மகனும் போய்விட்டானே என்று கதறி கதறி அழுது கொண்டேயிருந்தனர். இந்த தம்பதியினரை யாராலுமே சமாதானம் செய்ய முடியவில்லை.. நாளுக்கு நாள் துயரத்திலும், கண்ணீரிலும், வேதனையிலும், கவலையிலும் மூழ்கி கொண்டேயிருந்தார்கள்.
மகன் இல்லாத உலகில், இவர்களுக்கு வாழவும் பிடிக்கவில்லை.. அதனால், தற்கொலை செய்து கொள்ளலாம் என்று இருவருமே சேர்ந்து முடிவு எடுத்தார்கள். அதன்படி, ஆற்றில் விழுந்து இறந்துவிடலாம் என்று முடிவெடுத்து, கணவன், மனைவி இருவரும் திருவனந்தபுரம் நெய்யாற்றுக்கு சென்றார்கள்..
தம்பதி துயரம்: தங்கள் கைகளில் கயிறு கொண்டுவந்திருந்தார்கள்.. அங்கு ஆற்றங்கரையில், தங்களின் கைகளை இருவரும் ஒன்றாக கயிறுகளால் சேர்த்து கட்டிக்கொண்டு, ஒன்றாவே சேர்ந்து ஆற்றில் குதித்தனர்.. இதையடுத்து அவர்கள் 2 பேருமே ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டார்கள். தம்பதி இருவரும் ஆற்றில் பிணமாக கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தார்கள்.
போலீசாரும் ஆற்றங்கரைக்கு விரைந்து வந்து, கணவன், மனைவி உடல்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.. அப்போது, அவர்கள் பிணமாக கிடந்த இடத்தில், கடிதம் ஒன்று கிடந்தது.. தற்கொலைக்கு முன்பு, தம்பதியினர் அந்த கடிதத்தை எழுதி வைத்திருந்தனர். அதில், மகனின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று உருக்கமாக எழுதியிருந்தனர்.
உருக்கம்: அதுமட்டுமல், சடலங்களை மீட்டபோது, சினேகா தேவின் உடலில் அவர்களது மகனின் பெல்ட்டும் ஒட்டிக்கிடந்தது. இதைப்பார்த்து அந்த பகுதி மக்கள் கண்கலங்கினார்கள்.. ஒரே மகனை பிரிந்து வாழ முடியாமல், ஆற்றில் குதித்து தம்பதியினர் உயிரை மாய்த்து கொண்டது, திருவனந்தபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications