கேரள சட்டசபையில் ஒலித்த தமிழ்... தாய்மொழியில் உறுதிமொழி கூறி பதவியேற்ற தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத் தேர்தலில் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் A.ராஜா, தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியே ஆட்சியைத் தக்க வைத்தது.
கேரளாவில் மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி 99 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.

கேரள தேர்தல்
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த முறை ஒரு இடத்தில் மட்டும் வென்ற பாஜக இந்த முறை போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 18 நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வராக பினராயி விஜயன் கடந்த 20ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.

பதவியேற்பு விழா
கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்த இந்த விழாவில் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து இடைக்கால சபாநாயகராக பிடிஏ ரகீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குக் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், 15ஆவது கேரள சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

தமிழில் பதவியேற்ற தேவிகுளம் எம்எல்ஏ
இடைக்கால சபாநாயகர் ரகீம் இன்று அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, கேரள சட்டமன்றத் தேர்தலில் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் A.ராஜா, இன்று தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சு வெங்கடேசன் எம்பி வாழ்த்து
இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது பேஸ்புக் பக்கத்தில், "சேரநாட்டில் செந்தமிழ்! கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் A.ராஜா தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார் . அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications