திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது தாங்க நல்ல டாக்டரு.. எப்படி எழுதுராருப்பா 'முத்து முத்தாக'.. இணையத்தில் பரவும் மருந்து சீட்டு!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள டாக்டர் ஒருவர் மருந்துகளின் பெயரை அழகாக முத்து முத்தான எழுத்துக்களால் அனைவருக்கும் புரியும் படி மருந்து சீட்டில் எழுதிக்கொடுப்பது நோயாளிகளின் கவனத்தை பெற்றுள்ளது. தற்போது அவர் எழுதிய மெடிக்கல் சீட் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

காய்ச்சல், தலைவலி என உடல் நலக்கோளாறுகள் எது வந்தாலும் உடனடியாக நாம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவோம்.

அவரும் நமது உடல் நலனை பரிசோதித்து விட்டு அடுத்து நாம் என்ன மருந்து மாத்திரைகளை வாங்க வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய ஒரு மருந்து சீட்டையும் எழுதி தருவார்.

ஜாக்கிரதை! உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல்! அரசு மருத்துவமனை டீன் எச்சரிக்கைஜாக்கிரதை! உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல்! அரசு மருத்துவமனை டீன் எச்சரிக்கை

மருந்து சீட்டு

மருந்து சீட்டு

ஆனால், இந்த சீட்டில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்தால் பலருக்கும் போன தலைவலி திரும்ப வந்திடும். நம்ம ஊரில் கூட பேச்சு வழக்கு உண்டு . ''கையெழுத்து நல்லா இல்லன்னா.. தலையெழுத்து நல்லா இருக்கும்'' அப்டின்னு.. அது இத்தகைய டாக்டர்களுக்கு தான் கச்சிதமாக பொருந்தியிருக்கிறதோ என்று மக்கள் யோசிக்கும் அளவுக்கு மருந்து சீட்டில் டாக்டர்களின் கையெழுத்து இருக்கும். இத்தனைக்கும் மருந்துகளை பரிந்துரைக்கும் சீட்டில் தெளிவாக கேபிடல் லெட்டரில் டாக்டர்கள் எழுதிக்கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவுறுத்தல் இருக்கிறது.

புரிந்து கொள்ள முடியாது

புரிந்து கொள்ள முடியாது

ஆனால், இதை 90 சதவீதம் மருத்துவர்கள் பின்பற்றவில்லை என்றே சொல்லாம். பெரிய மருத்துவனைகளில் பிரிண்ட் அடித்து கொடுத்து விடுகின்றனர். இருந்தாலும் சின்ன சின்ன கிளினிக்குகளிதான் டாக்டர்களின் எழுத்து பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. டாக்டர்களின் இந்த எழுத்தை பார்மாசிஸ்டுகள் என்று அழைக்கப்படும் மெடிக்கல் வைத்திருப்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

அனைவரும் படித்து தெரிந்துகொள்ளும்படி..

அனைவரும் படித்து தெரிந்துகொள்ளும்படி..

நோயாளிகளுக்கு மருந்தின் விவரங்கள் தெரிந்து விடக்கூடாது என்று டாக்டர்கள் இப்படி எழுதிக்கொடுப்பதாக ஒருபக்கம் கூறப்படுகிறது. இருந்தாலும் பணி நெருக்கடி, எப்படியும் மெடிக்கல்காரர்களுக்கு தெரியும் என்பதால் அவசரமாக இப்படி எழுதிக்கொடுக்கிறோம் என்று டாக்டர்கள் தரப்பு சொல்லிக் கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் கேரளாவில் டாக்டர் ஒருவர், மெடிக்கல் சீட்டில் கேபிடல் லெட்டரில் அனைவரும் எளிதில் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் முத்து முத்தான எழுத்துக்களால் எழுதி கொடுத்துள்ளார்.

அழகாக எழுதுவதை பழகிக்கொண்டேன்

அழகாக எழுதுவதை பழகிக்கொண்டேன்

இந்த மருத்துவர் எழுதி கொடுத்த மெடிக்கல் சீட்டு விவரங்கள் அடங்கிய பதிவு சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி தீயாக பரவி வருகிறது. நிதின் நாராயணன் என்ற டாக்டர்தான் இப்படி தெள்ளத்தெளிவாக எழுதிக்கொடுத்து இருக்கிறார். பாலக்காட்டில் உள்ள மருத்துவமனையில் இந்த டாக்டர் பணியாற்றி வருகிறார். மருந்து சீட்டை அழகான கையெழுத்தில் எழுதி கொடுத்தது பற்றி டாக்டர் நிதின் நாராயணன் கூறுகையில், ''சிறு வயதில் இருந்தே நான் அழகாக எழுதுவதை பழகிக்கொண்டேன்.

நோயாளிகள் பாராட்டுகின்றனர்

நோயாளிகள் பாராட்டுகின்றனர்

படிப்பு முடித்த பிறகு அழகான கையெழுத்து நடையில் எழுத முயற்சித்து வருகிறேன். பிற மருத்துவர்கள் பிஸியாக இருப்பதால் எளிதில் படிக்க முடியாத படி எழுதி கொடுக்க கூடும். ஆனால், நான் எப்போதும் யாரும் புரிந்து கொள்ளும் வகையில்தான் மருந்து விவரங்களை எழுதி கொடுத்து வருகிறேன். நோயாளிகள் பலரும் இதை பாராட்டுகிறார்கள்'' என்றார்.

English summary
A doctor in Kerala has got the attention of his patients by writing the name of the medicine on the prescription in beautiful pearly letters in a way that everyone can understand. Now a medical cheat written by him is spreading like fire on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X