வெறும் 350 கிராம் எடையில் பிறந்த குழந்தை.. உயிர் பிழைக்கவைத்து அசத்திய கேரள மருத்துவர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் வெறும் 350 கிராம் எடையில் பிறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். புதியதாக பிறக்கும் குழந்தை 1.10 கி.கி எடைக்கு குறைவாக இருந்தால் அது உயிர் பிழைப்பது மிகவும் கஷ்டமாகும்.
இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக சரிந்து வரும் நிலையில், ஒவ்வொரு பிறப்பையும் காப்பாற்றுவது மிகப்பெரிய பொறுப்பாக மாறியிருக்கிறது. இதனை உணர்ந்துதான் கேரளாவில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

அதாவது, கேரளா மாநிலம் கொச்சியில் சில மாதங்களுக்கு முன்னர் சஷிஷா எனும் இளம்பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 23 வாரங்களில் குழந்தை பிறந்திருக்கிது. அதாவது ஒவ்வொரு பிரசவமும் 40 வாரங்கள் வரை எடுக்கும். ஆனால் இப்பெண்ணுக்கு ஐந்தே முக்கால் வாரத்திலேயே பிரசவமாகியுள்ளது. பிறந்த குழந்தையின் வெயிட் வெறும் 350 கிராம்தான். 1100 கிராமுக்கு குறைவாக பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றுவது கொஞ்சம் சிக்கலான விஷயம்.
ஆனால் இந்த சவாலை மருத்துவர்கள் மிகவும் சாமர்த்தியமாக அணுகி குழந்தையை காப்பாற்றியுள்ளனர். தற்போது குழந்தை பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது. இதுவரை இன்குபேட்டரில் வைத்து வளர்க்கப்பட்ட குழந்தையானது, தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறது. குழந்தை நலமுடன் இருப்பதாகவும், இனி மருத்துவ கவனிப்பு அவசியமில்லை என்றும் மருத்துவ குழு கூறியிருக்கிறது.
மேலும் அவர்கள் கூறுகையில், "குழந்தைகள் ஓரளவு முழுமையான வளர்ச்சியை எட்டுவதற்கு குறைந்தபட்சம் 24 வாரங்கள் கருவில் இருக்க வேண்டும். ஆனால் இப்போது பிறந்த குழந்தை, வெறும் 23 வாரங்களில் பிறந்துவிட்டது. எனவே, அக்குழந்தைக்கு சுமார் ஒருமாத காலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இப்போது குழந்தையின் எடை 1.850 கி.கி உயர்ந்திருக்கிறது. குழந்தையின் தாய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த தொற்று குழந்தையையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது எனவே குழந்தையை சிறப்பு கவனம் எடுத்து பராமரித்தோம்.
தற்போது குழந்தை பூரண குணமடைந்திருக்கிறது. இக்குழந்தைக்கு நோவா என்று பெயரிடப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளனர். கேரளாவில் மருத்துவ துறை வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு மருத்துவ சாதனைகளுக்கு கேரளா பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், வெறும் 23 வாரத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் காப்பாற்றியிருப்பது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
350 கிராம் எடையில் பிறந்த நோவோ குழந்தை, தெற்கு ஆசியாவில் மிகவும் குறைந்த எடையில் பிறந்த குழந்தை என்கிற பெயரை பெற்றிருக்கிறது. இதற்கு முன்னர், ஹைதராபாத்தை சேர்ந்த குழந்தைதான் இந்த பெயரை பெற்றிருந்தது. அக்குழந்தை 380 கிராம் எடை கொண்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications