தினமும் அடிப்பார்.. கொடுமை! விஸ்மயா தெரியுமா? கேரளாவில் மீண்டும் இளம் மனைவி துர்மரணம்.. ஷாக் லெட்டர்
திருவனந்தபுரம்: கடந்த வருடம் கேரளாவில் விஸ்மயா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் மீண்டும் கொல்லத்தில் இளம்பெண் ஒருவர் அதே போல் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற விஸ்மயா என்ற பெண்ணின் மரணம் நாட்டையே உலுக்கியது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விஸ்மயா என்ற 24 வயது பெண் கடந்த வருடம் ஜூன் மாதம் அவரின் கணவர் கிரண் குமார் வீட்டில் மர்மமான முறையில் பலியாகி கிடந்தார்.
10-20 லட்சம் ரூபாய் கூடுதலாக வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண் கொடுமை படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. உடல் முழுக்க காயத்தோடு மரணத்திற்கு முன் விஸ்மயா அனுப்பிய வாட்ஸ் ஆப் புகைப்படங்கள் கேரளாவை உலுக்கியது.

ஹை எண்ட் மாடல்
கூடுதல் வரதட்சணை கேட்டும், ஹை எண்ட் மாடல் கார் கேட்டும் விஸ்மயாவை அவரின் கணவர் கொடுமை படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. என்னுடைய முடியை பிடித்து கிரண் இழுத்து அடித்தார். என் முடியை இழுத்து பின் அதை கதவில் வேகமாக முட்டினார். வீட்டுக்குள் வந்ததும் கதவை சாத்திவிட்டு என்னை அடிப்பார், என்னை அதிகம் அடித்துவிட்டார் இன்று.. என்னால் இனியும் டார்ச்சர்களை தாங்க முடியாது என்று விஸ்மயா சாவதற்கு முன் அனுப்பிய மெசேஜில் குறிப்பிட்டு இருக்கிறார்.

விஸ்மயா
இந்த கொலை வழக்கில் விஸ்மயா கணவர் கிரண் குமார் கைது செய்யப்பட்டார். அதன்பின் நடந்த கோர்ட் விசாரணையில் விஸ்மயாவை அவரின் கணவர் கிரண்தான் தற்கொலைக்கு தூண்டினார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 500 பக்கத்திற்கு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 42 சாட்சியங்கள் இந்த வழக்கில் சாட்சியங்கள் வழங்கினார்கள். கேரளாவை உலுக்கிய இந்த வழக்கிற்கு பின் வரதட்சணைக்கு எதிராக கேரளாவில் பெரிய பிரச்சாரம் தொடங்கியது.

வரதட்சணை
வரதட்சணை கொடுக்க மாட்டோம்.. வாங்க மாட்டோம் என்று கூறி பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது விஸ்மயா போலவே கேரளாவில் இன்னொரு பெண் பலியாகி உள்ளார். கொல்லத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்தான் தற்கொலை செய்துள்ளார். வழக்கறிஞரான இவர் கண்ணன் நாயர் என்ற வழக்கறிஞரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது கணவன் ஐஸ்வர்யா இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கடிதம்
வீட்டில் இவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலைக்கு பின்பும் வரதட்சணை கொடுமை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஐஸ்வர்யா தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில், கணவர் என்னை அடிக்கடி அடிப்பார். என்னிடம் மோசமாக நடந்து கொள்வார்.

என்ன நடந்தது?
என்னை அன்பாக அவர் நடத்தியதே இல்லை. என்னை மோசமாக கொடுமைப்படுத்துவார். என்னை அடிக்கடி மோசமாக அவர் நடத்தி இருக்கிறார். என் தாலியையும் அவர் அறுத்துவிட்டார். என் சம்பள பணத்தை எல்லாம் வாங்கிக்கொண்டு, செலவிற்கு கூட பணம் தர மாட்டார். அவர்தான் என் மரணத்திற்கு காரணம் என்று ஐஸ்வர்யா கடிதத்தில் தெரிவித்துள்ளார். கணவர் கண்ணன் நாயரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications