மரணமடைந்த மகன்.. 30 ஆண்டுகள் கழித்து பழிக்கு பழி வாங்கிய தந்தை.. கேரளாவில் அரங்கேறிய இரட்டைக் கொலை
திருவனந்தபுரம்: ஓராண்டு இரண்டாண்டு அல்ல., 30 ஆண்டுகள் கழித்து முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது மகனின் மரணத்துக்கு பழிவாங்கும் விதமாக கணவன் - மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கிளிமன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் நாயர் (70). ராணுவத்தில் பணியாற்றி வந்த இவருக்கு ஒரு மனைவியும், ரமேஷ் என்ற மகனும் இருந்தனர். ஒரே ஒரு மகன் என்பதால் அவர் மீது சசிதரன் அதிக அன்பை வைத்திருந்தார். இந்த சூழலில், 1993-ம் ஆண்டு ரமேஷ் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தார்.
அதன் பிறகு மேல்படிப்பு படிக்க விரும்பாத அவர், வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ஆசைப்பட்டுள்ளார். ஒரே மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப சசிதரனும், அவரது மனைவியும் முதலில் சம்மதிக்கவில்லை. ஆனால், ரமேஷ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

பஹ்ரைனில் வேலை..
இதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளில் வேலை வாங்கி வரும் நிறுவனங்களையும், ஆட்களையும் தேடி சசிதரன் நாயர் அலைந்து திரிந்தார். அப்போது அவரது வீட்டுக்கு சற்று அருகில் வசித்து வரும் பிரபாகரன் குருப் (தற்போதைய வயது 60) என்பவர், அவரது மகனுக்கு பஹ்ரைனில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார். இதற்கு அவர் கணிசமான தொகையையும் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து, தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பிரபாகரன் குருப்புக்கு பணம் கொடுத்தார் சசிதரன் நாயர்.

எடுபிடி வேலையில் சேர்ந்த ரமேஷ்..
இதன் தொடர்ச்சியாக, ரமேஷுக்கு பஹ்ரைன் நாட்டில் கிளார்க் பணி தயாராக இருப்பதாக கூறிய பிரபாகரன், அதற்கான விசாவையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் ரமேஷ் பஹ்ரைனுக்கு மகிழ்ச்சியாக வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு சென்று பணியில் சேர்ந்த பிறகுதான், அது கிளார்க் வேலை இல்லை; பணியாள் வேலை என்பது அவருக்கு தெரியவந்தது. வீட்டில் இருக்கும் நகைகள் அனைத்தையும் அடமானம் வைத்து, பணியாள் வேலைக்கு வந்துவிட்டோமே என நினைத்து நொந்து இருக்கிறார் ரமேஷ். இதுகுறித்து தனது பெற்றோரிடமும் கூறி ரமேஷ் வருத்தப்பட்டிருகிறார். இதுதொடர்பாக சசிதரன், பிரபாகரனிடம் கேட்ட போது அது பற்றி தனக்கு தெரியாது என அலட்சியமாக பதிலளித்திருக்கிறார்.

மன அழுத்தத்தால் தற்கொலை
இந்த சூழலில், அதிக மன அழுத்தம் காரணமாக ரமேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடந்தது 1993-ம் ஆண்டு. மகன் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் சசிதரன் நாயரும், அவரது மனைவியும் அழுது புலம்பியுள்ளனர். ஒரே மகனை பறிகொடுத்த சோகத்தில் அவர்கள் இருந்துள்ளனர். இவை அனைத்துக்கும் காரணமான பிரபாரன் குருப் மீது சசிதரன் நாயர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு 29 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துவிடும். தனது மகன் மரணத்துக்கு இன்று நீதி கிடைத்துவிடும் நாளை நீதி கிடைத்துவிடும் என சசிதரன் நாயர் காத்துக் கொண்டிருந்தார்.

தீர்த்துக்கட்ட முடிவு
ஆனால், இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், பிரபாகரன் குருப் மீது எந்த தவறும் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சசிதரன் நாயர் நொறுங்கிப் போனார். இத்தனை ஆண்டுகள் காத்திருந்தும் தனது மகன் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லையே என எண்ணிய சசிதரன் நாயர், பிரபாகரன் குருப்பை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

இரட்டை கொலை
அதன்படி, கடந்த சனிக்கிழமை பிரபாகரன் வீட்டுக்கு சென்ற சசிதரன், அவரை கண்டபடி திட்டி வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறினார். இதையடுத்து வெளியே வந்த பிரபாகரனை சரமாரியாக தாக்கினார் சசிதரன். சசிதரனின் தாக்குலை சமாளிக்க முடியாமல் பிரபாகரன் கீழே சரிந்தார். அப்போது அங்கிருந்த சுத்தியலை எடுத்து அவர் பிரபாகரனை தாக்கினார். இதை பார்த்த பிரபாகரனின் மனைவி விமலா குமாரி (55), சசிதரனை தடுத்துள்ளார். அப்போது அவரை தாக்கி கீழே தள்ளிவிட்ட சசிதரன், தான் கொண்டு வந்த பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றியதில் அவர் அலறி துடித்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

30 ஆண்டுகள் கழித்து...
இதனிடையே, பெட்ரோல் ஊற்றி தீ வைத்த போது, சசிதரன் நாயருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபாகரன் தந்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் சசிதரனை கைது செய்துள்ளனர். மகனின் மரணத்துக்காக 30 ஆண்டுகள் கழித்து தந்தை பழிதீர்த்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications