கேரளாவில் மீண்டும் காங்கிரஸ்.. கம்யூனிஸ்ட்க்கு விழும் அடி.. பாஜக பரிதாபம்.. எக்ஸிட் போல் முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 9 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற வாய்ப்புள்ளது? என்பது தொடர்பான எக்ஸிட் போல் கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக People Pulse சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி ஒரே கட்டமாக கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 79.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தை போல் மே 4ம் தேதி கேரளா சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் கேரளாவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) மாலை 6.30 மணி முதல் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி UDF எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி LDF என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தான்
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக People pulse எக்ஸிட் போலில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணி 75 முதல் 85 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 55 முதல் 65 தொகுதிகளில் வெல்ல சான்ஸ் எனவும், பாஜக கூட்டணி 0 - 3 இடங்களில் கைப்பற்றலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications