'சதுரங்க வேட்டை' நட்டியே தோற்றுப்போவார்.. அப்படி ஒரு மோசடி.. அதிர்ந்து போன கேரளா!
திருவனந்தபுரம்: அரிய பழங்கால பொருட்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி பல்வேறு தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த மோன்சன் மாவுங்கல் என்பவரைக் கேரள போலீசார் கைது செய்துள்ளனர். சதுரங்க வேட்டை படம் பாணியில் நடந்த மோசடியால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். இவர் தெலுங்கு திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் தன்னிடம் பல்வேறு அரிய தொல் பொருட்கள் உள்ளதாகக் கூறி, பல முக்கிய தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 6.27 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

மியூசியம்
மோன்சன் மாவுங்கல் கேரளாவில் சொந்தமாக ஒரு மியூசியம் வைத்துள்ளார். பழங்கால பொருட்களைச் சேகரிப்பவர் என்று கூறிக் கொள்ளும் மோன்சன் மாவுங்கல், பல விவிஐபிகளை தனது மியூசியத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் தொடங்கிய முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா என மோன்சன் மாவுங்கலின் மியூசியத்திற்கு சென்றவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். வி.வி.ஐ.பி-க்கள் மியூசியத்தில் இருக்கும்போது புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் மோன்சன் மாவுங்கல், இதைக் காட்டி மற்றவர்களை ஏமாற்றியுள்ளார்.

சுல்தான் கிரீடம்
அதாவது விவிஜபிகளின் புகைப்படங்களை மற்ற தொழிலதிபர்களிடம் காட்டும் மோன்சன் மாவுங்கல், தன்னிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் பழங்கால பொருட்கள் என நம்ப வைத்துள்ளார். இதை வைத்து பலரிடமும் கோடிக் கணக்கில் மோன்சன் மாவுங்கல் பண மோசடி செய்துள்ளார். சுல்தான் கிரீடம் விற்றதில் தனக்கு 70,000 கோடி ரூபாய் வரவுள்ளதாகக் கூறிய அவர், இதற்காக வரி செலுத்தப் பணம் தேவை என்று சில தொழிலதிபர்களிடம் இருந்து பணத்தைப் பறித்துள்ளார். பணம் கொடுத்து உதவினால் வங்கியில் வட்டி இல்லா கடன் பெற்றுத் தருவதாகக் கூறியதால், பல தொழிலதிபர்களும் மோன்சன் மாவுங்கலுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மோசடி மன்னன் கைது
இது குறித்து சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மோன்சன் மாவுங்கலை கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதேபோல தன்னிடம் இரிடியம் போன்ற அரிய வகை உலோகங்கள் இருப்பதாகவும் கூறி பலரிடம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார் மோன்சன் மாவுங்கல். இன்னும் சிலரிடம் தனது வங்கியிலுள்ள 2.62 லட்சம் கோடி ரூபாய் லாக் ஆகிவிட்டதாகவும் இதை மீட்க 10 கோடி ரூபாய் வேண்டும் என்று கூறி பணத்தைச் சுருட்டியுள்ளார். இது தொடர்பாக ஆறு பேர் கேரள முதல்வரிடமே நேரடியாகப் புகாரளித்தனர். அதன் பின்னரே விசாரணை தீவிரமடைந்துள்ளது.

21 வாகனங்கள் பறிமுதல்
இது மட்டுமல்லாது டி.ஜி.பி, முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய புள்ளிகள் தனக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியும் அவர் பண மோசடி செய்துள்ளார். மோன்சன் மாவுங்கல்லுக்கு சொந்தமான இடத்தில் அதிரடி ஆய்வு செய்த போலீசார் ஆடம்பர கார்கள், கேரவன்கள் உட்பட மொத்தம் 21 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது மியூசியத்தில் உள்ள பழங்கால பொருட்களின் உண்மைத் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்த மோன்சன் மாவுங்கல் குறித்து விசாரணையைக் கேரள போலீசார் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications