ஓ.பன்னீர் செல்வம் விழாவில் பறந்த ட்ரோன்.. அதிர்ச்சியில் கேரள அரசு
திருவனந்தபுரம்: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்ற விழாவில் ''ட்ரோன்' பறந்தது தொடர்பாக தமிழக அதிகாரிகளிடம் கேரள வனத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தேக்கடி ஷட்டர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஷட்டரை இயக்கி வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மகனும் தேனி லோக்சபா உறுப்பினருமான ரவீந்திரநாத்குமார், எம்.எல்.ஏ, ஜக்கையன், கலெக்டர் பல்லவி பல்தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ட்ரோன் விமானம்
இந்நிகழ்ச்சி நடைபெற்ற போது ட்ரோன் எனப்படும் சிறிய வகை விமானத்தை பறக்க விடப்பட்டு நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. பொதுவாக இதுபோன்ற ஒளிப்பதிவு இப்போதெல்லாம் திருமணம் உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளில் கூட செய்யப்படுகிறது. கேமரா பல கோணங்களில் மேலே இருந்தும் படம் பிடிக்க இது உதவும்.

முல்லை பெரியாறு
ஆனால், நிகழ்ச்சி நடைபெற்ற இடம் பாதுகாக்கப்பட்ட பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இங்கு புகைப்படம் எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ கேரள காவல் துறை மற்றும் வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.

விளக்கம்
ஆனால், தமிழக துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டபோது, கேரள அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. எனவே இது தொடர்பாக சரணாலய இணை இயக்குனர் ஷில்பா குமார் தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலக பொறுப்பு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

ஆய்வுகள்
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று தமிழகம் சொல்லி வருகிறது. பல ஆய்வுகளும் அதை நிரூபித்துள்ளன. ஆனால், கேரள அரசு அந்த அணை பலவீனமாக இருப்பதாக தெரிவித்து வருகிறது. இந்த நிலையில்தான், ட்ரோன் மூலமாக அணையின் விவரங்களை தமிழக அரசு கண்காணித்திருக்கும் என்ற அச்சத்தில் கேரள அரசு இருப்பதாக கூறப்படுகிறது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications