உச்சக்கட்ட மோதல்.. ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை அணுகுவோம் - கேரள முதல்வர் பினராயி அதிரடி
திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரை அணுகுவோம் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து, பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் ஆளுநர் கற்பனை செய்துகொண்டு, ஆர்எஸ்எஸ் உத்தரவின்படி நடந்துகொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆரம்பம் முதலே மோதல் போக்கு..
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக மூத்த தலைவரான ஆரிப் முகமது கானை ஆளுநராக மத்திய அரசு 2019-ம் ஆண்டு நியமித்தது. அவர் ஆளுநராக பொறுப்பேற்றது முதலாகவே கேரள அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். கேரள அரசு அனுப்பும் முக்கிய கோப்புகளை திருப்பி அனுப்புவது, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களை விமர்சிப்பது என ஆளுநரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் கேரள அரசை கோபப்படுத்தியது.

ராஜினாமா செய்ய உத்தரவு
இந்த சூழலில், கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் வேந்தர்களை ராஜினாமா செய்யுமாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று அதிரடியாக உத்தரவிட்டார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் இந்த உத்தரவை தாம் பிறப்பித்திருப்பதாகவும், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவு கேரள அரசை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆளுநருக்கு கடும் கண்டனங்களையும், குற்றச்சாட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் கைப்பாவை..
இந்த விவகாரம் குறித்து பாலக்காடில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: ஆளுநருக்கான பணிகளை விட்டுவிட்டு மற்ற அனைத்து வேலைகளிலும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஈடுபட்டு வருகிறார். தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் கற்பனை செய்து கொண்டு, ஒரு சர்வாதிகாரியை போல அவர் நடந்து வருகிறார். அவரது நடவடிக்கைகளை பார்க்கும் போது, கேரளாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோகக்கத்தில் அவர் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவையை போல அவர் இயங்கி வருகிறார்.

சாதாரண பொது அறிவு..
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜஸ்ரீ நியமிக்கப்பட்டது செல்லாது என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட உத்தரவு. சிறு குழந்தைக்கு கூட இந்த விஷயம் தெரியும். ஆனால், அந்த உத்தரவை பொதுவாக கருதி, 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்யுமாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டுள்ளதை என்னவென்று சொல்வது? இது மிகவும் சாதாரண புரிதல். ஓரளவுக்கு பொது அறிவு இருந்தால் கூட இதை புரிந்துகொள்ள முடியும்.

ஆளுநரை திரும்பப் பெற..
கேரள அரசின் நிர்வாகத்துக்கும், மாணவர்களின் கல்விக்கும் தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் ஈடுபட்டு வருகிறார். எனவே, தேவைப்பட்டால் அவரை ஆளுநர் பதவியில் இருந்து திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் கேரள அரசு வலியுறுத்தும். அதேபோல, பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications