திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரோட்ல போனாதான தடுப்பீங்க! சபரிமலைக்கு பெண்களை ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல முடிவு.. பினராயி அதிரடி!

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கொண்டு செல்வதற்காக அம்மாநில அரசு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கொண்டு செல்வதற்காக அம்மாநில அரசு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது.

கடந்த மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இரண்டு முறை சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது.

ஆனால் கடைசி வரை ஒரு பெண் கூட கோவிலுக்குள் நுழையவில்லை. பின் பெரும் பரபரப்பிற்கு பின் கோவில் மூடப்பட்டது.

மீண்டும் திறக்கிறார்கள்

மீண்டும் திறக்கிறார்கள்

இந்த நிலையில் இந்த மாதம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. நவம்பர் 17ம் தேதி மாண்டலம் மாகரம் விளக்கு பூஜைக்காக்க மீண்டும் கோவில் திறக்கப்பட உள்ளது. இந்த முறை கோவில் 41 நாட்கள் திறந்து இருக்கும். இது மிக முக்கியமான பூஜையாகும்.

எல்லோரும் புக்கிங்

எல்லோரும் புக்கிங்

இந்த நிலையில் கோவிலில் தரிசனம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கியது. இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 50 வயதுக்கும் குறைவான பெண்கள் 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக அங்குள்ள இந்துத்துவா அமைப்பினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

என்ன திட்டம்

என்ன திட்டம்

ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்துத்துவா அமைப்பினர், பாஜகவினர் பெண்கள் நுழைவிற்கு எதிராக தீவிரமாக போராடினார்கள். இந்த போராட்டம் காரணமாக சில பெண்கள் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த மாதம் திறக்கப்படும் போதும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று திட்டமிட்டு வருகிறார்கள்.

அரசு அதிரடி

அரசு அதிரடி

இதை சரி செய்ய அரசு ஒரு திட்டம் வைத்துள்ளது. அங்கு பெண்கள் எல்லோரும் நிலக்கல் என்ற பகுதியில்தான் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அதனால் அந்த பகுதியை தாண்டி ஹெலிகாப்டரில் பெண்களை கோவிலுக்கு அருகில் இறக்கிவிட முடிவெடுத்து இருக்கிறார்கள. இதற்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வருகிறது. கோவில் திறக்கப்படும் அன்று இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படலாம்.

English summary
Kerala government will use Helicopter for Ladies in Sabarimala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X