கேரள அரசு துறைகளில் ஓராண்டில் 25000 பேருக்கு வேலை.. எம்ப்ளாய்மெண்ட் எக்சேஜ் இல்லாமல் புதிய முறை
திருவனந்தபுரம்: கேரளாவின் பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அங்குள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை தவிர்த்துவிட்டு, ஓராண்டில் சுமார் 25,000 பேரை வேலைக்கு எடுக்கின்றன
கேரளாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. ஆனால் கேரளாவில் அரசு துறை நிறுனங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றன.

பொதுவாக கேரளாவில் உள்ள அரசின் நடைமுறைகளின்படி, இடஒதுக்கீடு, முன்னுரிமை உள்ளிட்ட அளவுகோல்களை பின்பற்றி வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மட்டுமே அரசு வேலைகளில் தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் .
ஆனால் பெரும்பாலான கேரள மாநில அரசு நிறுவனங்கள் சட்டப்பூர்வமாக இல்லாமல், சில நிறுவனங்களின் ஆலோசனையின் பேரிலும், தாங்களாகவும், நேரடி வேண்டிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன. இப்படி தேர்வு செய்யப்படும் வேலைக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் கூட கிடைக்கிறதாம். கடந்த ஓராண்டில் மட்டும் கேரளாவின் பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அங்குள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை தவிர்த்துவிட்டு, இந்த ஓராண்டில் சுமார் 25,000 பேரை தேர்வு செய்கின்றன.
கல்வி, சுகாதாரம், உள்ளாட்சித் துறை, நீர் வளத்துறை மற்றும் பேருந்துகளை கையாளும் கே.எஸ்.ஆர்.டி.சி., ஆகியவை வேலைவாய்ப்பு அலுவலகங்களை தவிர்த்துவிட்ட முக்கியமான நிறுவனங்களாகும். பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தது.ஆனால் அந்த முடிவு கூட எந்த பலனும் அளிக்கவில்லை. பள்ளி கல்வித்துறையும் அவர்களாகவே 11,200 தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளது..
கே.எஸ்.ஆர்.டி.சி உட்பட பல பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேர்ப்புக்காக மேலாண்மை மேம்பாட்டு மையத்தின் (சிஎம்டி) உதவியின் படிதான் ஆட்களை தேர்வு செய்கின்றன. அரசுத் துறைகளுககு ஆலோசனை தரும் சிஎம்டி நிறுவனத்துக்கு ஆட்களை தேர்வு செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியிருந்தாலும், அவற்றின் மூலமே நியமனங்கள் தடையின்றி தொடர்கின்றன.இந்த சிஎம்டியில் வேலைவாய்ப்பு பெறுவது என்பது கட்டண சேவையாகும். ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடப்பது இலவச சேவையாகும். ஆனாலும் சிஎம்டி தான் வேலைக்கு ஆள் எடுக்க கேரள அரசு துறை நிறுவனங்களுக்கு உதவுகிறது.
என்னதான் கேரள அரசு துறை நிறுவனங்கள் தாங்களாகவே வேலைக்கு எடுத்தாலும், எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஜ் எனப்படும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் வேலைக்கு ஆள் எடுத்து தருவதை தொடரத்தான் செய்கின்றன, அரசு மற்றும் தனியார் துறைகளில் ஆண்டுக்கு 30,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி உள்ளன.
2022 ஆம் ஆண்டில், அரச நிறுவனங்களில் 2,807 நிரந்தர நியமனங்களும் 11,625 தற்காலிக நியமனங்களும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு கண்காட்சி மூலம் தனியார் நிறுவனங்களில் 10,000 பேர் வேலைவாய்ப்பு தந்துள்ளன. 5,000 பேர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாகவும் வேலை பெற்றுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications