தாய், தந்தைக்கு பதில்.. 'பெற்றோர்'! திருநங்கை தம்பதி குழந்தையின் பிறப்பு சான்றிதழில் மாற்றம்!
திருவனந்தபுரம்: திருநங்கை தம்பதியினரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில், பெற்றோர்களை 'தந்தை', 'தாய் என்பதற்குப் பதிலாக 'பெற்றோர்' என குறிப்பிட்டால் போதும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மாற்றுபாலினத்தவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பமாக வாழ விரும்பினால், யார் கணவன்? யார் மனைவி என்கிற கேள்வி எழுகிறது. குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாலும் தந்தை யார்? தாய் யார் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. பாலினங்களில் இரண்டு மட்டுமே இல்லை, அதை தாண்டி பல பாலினங்கள் இருக்கின்றன, அவர்களுக்கான அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்காத இன்னல்களே இல்லை என்று சொல்லலாம்.

இப்படி இருக்கையில்தான் இவர்களை அங்கீகரிக்கும் விதமாக கேரள உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதாவது கேரளாவை சேர்ந்த ஜியா பாவல், ஜஹாத் திருநங்கை தம்பதியினருக்கு கடந்த 2023ம் ஆண்டு குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் தாய் ஜஹாத் என்றும் தந்தை ஜியா பாவல் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்த பெற்றோர்கள், ஜஹாத் தன்னை ஆணாக பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து உரிமை கோரி வருகிறார்.
இப்படி இருக்கையில், தன்னை தாய் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு என்றும், தங்களை வெறும் பெற்றோர் என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்றும் கூறி வந்தார்.
ஆனால், மருத்துவமனை அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை. இந்நிலையில் திருநங்கை பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், இன்று இந்த வழக்கின் மீது உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் வெறும், 'பெற்றோர்' என்று குறிப்பிட்டால் போதும். தாய், தந்தை என குறிப்பிட வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறது.
வழக்கின் பின்னணி:
ஜஹாத் என்பவர் பிறப்பால் பெண். ஆனால், பருவ வயதில்தான், தான் ஒரு மாற்று பாலினத்தை சேர்ந்தவர் என்பதை உணர்ந்திருக்கிறார். அதேபோல ஜியா பாவல் பிறப்பால் ஆண். ஆனால், அவரும் வளரிளம் பருவத்தில் தான் திருநங்கை என்பதை உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து இருவரும் அப்படியே வளர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு 2023ம் ஆண்டு குழந்தை பிறந்தது.
திருநங்கை தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது நாட்டிலேயே முதல்முறை இதுதான். பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் மாற்றம் கோரிதான் அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த உத்தரவு திருநங்கை தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications