செல்லாத திருமணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு உள்ளதா? கேரள ஐகோர்ட் தீர்ப்பு
திருவனந்தபுரம்: செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர் சொத்தில் பங்கு இருக்கிறதா என்பது குறித்த வழக்கில் கேரள ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. அதில் செல்லாத திருமணத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் பெற்றோரின் சொத்துக்களில் உரிமை உள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நமது நாட்டில் பலதரப்பட்ட மனம் என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது முதலில் திருமணமாகியிருந்தால் அதை முறையாக விவாகரத்து பெற்றே 2வது திருமணம் செய்ய வேண்டும்.

அப்படி முறையாக விவாகரத்து வாங்காமல் மீண்டும் திருமணம் செய்தால் அதை Void Marriage அதாவது செல்லாத திருமணங்கள் என்பார்கள். இது தொடர்பான வழக்கிலேயே கேரள ஐகோர்ட் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
கேரள ஐகோர்ட்: அதாவது கேரளாவைச் சேர்ந்த ஒருவர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த 2வது திருமணத்தில் அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அந்த மூவருக்கு ஓய்வு மற்றும் பென்ஷன் பலன்களை வழங்குவது குறித்த வழக்கிலேயே கேரள உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஹரிசங்கர் வி மேனன் கடந்த 2023ல் சுப்ரீம் கோர்ட் இதேபோன்ற வழக்கில் அளித்த தீர்ப்பை மேற்கொள் கட்டினார். மேலும், இந்து திருமணச் சட்டத்தின் திருத்தப்பட்ட பிரிவு 16, செல்லாத திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் . பெற்றோரின் சொத்தில் உரிமை உண்டு எனக் கூறுவதாகக் குறிப்பிட்டார்.
வழக்கு பின்னணி: அனிதா என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்து உள்ளார். சீனிவாசன் என்பவர் கடந்த 1983ல் மனுதாரரை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 1984ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும், அதன் பிறகு சீனிவாசன் லீலா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகே அனிதாவுடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் விவாகரத்து வழங்கப்பட்டாலும் அதில் சில பிரச்சினைகள் உள்ளதாக அனிதா தரப்பு கூறுகிறது.
இந்தச் சூழலில் கடந்த 2015ல் சீனிவாசன் காலமானார். அவரது ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்கள் தங்களுக்கு மட்டுமே வருவது போல 2வது மனைவியும் அவரது குழந்தைகளும் மாற்றிவிட்டதாக அனிதா தனது மனுவில் கூறியிருந்தார். சீனிவாசன் தன்னை விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்ய இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் கூறப்பட்டது. இந்து இளைஞர் ஒருவர், விவாகரத்து செய்யாமல், மதம் மாறினாலும் கூட 2வது திருமணத்தைச் செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் 1995ல் அளித்த உத்தரவையும் மேற்கொள் காட்டினர்.
நீதிமன்றம் கருத்து: லீலா உடனான திருமணம் செல்லாது என்பதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட் நீதிபதி, "இந்தி இளைஞர் ஒருவர் இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால், விவாகரத்து பெறும் வரை அந்த பந்தம் தொடரும். வேறு மதத்திற்கு மாறுவதன் மூலம் மட்டுமே இந்த திருமண உறவை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் அதையே தான் சொல்கிறது. எனவே, லீலா உடனான திருமணத்தை சட்டப்பூர்வமாக்க அங்கீகரிக்க முடியாது..
திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்ற போதிலும் அதற்காகச் சீனிவாசன்- லீலாவுக்கு பிறந்த குழந்தைகளின் உரிமைகளை மறந்துவிட முடியாது. சீனிவாசனுக்கு அந்த உறவில் 3 குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களுக்கும் சீனிவாசன் சொத்தில் பங்குள்ளது" என்றார்.
முக்கியம்: அதாவது முதல் திருமணத்தை விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்து கொள்வது செல்லாது. அதேநேரம் செல்லாத திருமணமாக இருந்தாலும் அதில் பிறக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோரின் சொத்தில் பங்கு இருக்கிறது" என்று நீதிபதி கூறியிருக்கிறார். கேரள ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications