"வெறித்தனம்".. 34 வயது பெண்ணின் கேடித்தனம்.. இவர் ஒரு அரசியல்வாதியாம்.. பரிதாப புருஷன், பலே காதலனும்
சிபிஎம் பெண் பிரமுகர் கைதான பின்னணி என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது
திருவனந்தபுரம்: நிம்மதியாக கள்ளக்காதலனுடன் வாழவே முடியலையாம்.. அதனால் கணவனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டால், ஜாலியாக வாழலாம் என்று முடிவெடுத்துள்ளார் ஒரு பெண்.. அதுவும் ஒரு அரசியல் பிரமுகர்.. இதை கேட்டு கேரளாவே 2 நாட்களாக அதிர்ந்து போய் கிடக்கிறது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுமியா சுனில்.. 34 வயதாகிறது.. வண்டன்மேடு பஞ்சாயத்தின் சிபிஐ(எம்) உறுப்பினராக இருப்பவர்..
கணவர் பெயர் சுனில் வர்கீஸ்... இவர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வேலை பார்த்து வருகிறார். அதேபோல, இடுக்கி பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சவுமியா
இந்நிலையில், சவுமியாவுக்கும், வினோத்துக்கும் போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அதுவே தகாத உறவாக உருவெடுத்தது.. இதனால், சவுமியாவுக்காகவே வினோத், சவுதியில் இருந்து கேரளாவுக்கு வந்து போவார்.. மனைவியை சவுதியிலேயே விட்டுவிட்டு, வினோத் மட்டும் வருவார்.. சில நாட்கள் சவுமியா வீட்டில் தங்கிவிட்டும் போவார்.. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தனர்.. ஆனால், அதற்கு சவுமியாவின் கணவர் சுனில் தடையாக இருப்பதால் அவரை கொன்றுவிட முடிவெடுத்தனர்.

கள்ளக்காதல்
ஆனால் நேரடியாகவே கொன்றுவிட்டால் தாங்கள் ஜெயிலுக்கு போக வேண்டி வரும் என்பதால், சுனிலை ஜெயிலுக்கு அனுப்புவது என்று பிளான் போட்டார்கள்.. போதை வழக்கில் சிக்க வைத்துவிட்டால் நீண்ட நாட்கள் சிறையில் இருக்க நேரிடும் என்பதால், அந்த பிளானையே ஒர்க் அவுட் செய்தார்கள்.. பிப்ரவரி 22ம் தேதி எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷெஃபின் மற்றும் ஷானவாஸ் ஆகியோரிடம் இருந்து ரூ.45,000க்கு போதை மாத்திரைகளை வாங்கி வந்து சுனிலின் பைக்கில் வைத்தார் சவுமியா.

கள்ளக்காதலன்
பிறகு உடனடியாக போலீசுக்கும் தகவல் தந்துவிட்டார்.. அதன்பேரில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து சுனிலின் பைக்கில் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரித்தனர்... பைக்கில் இந்த போதை மருந்து எப்படி வந்ததென்று தெரியாது என சுனில் பதறினார்.. மறுத்தார்.. கடுமையாக வாதாடினார்.. இதனால் போலீசுக்கே சுனில் மீது ஓரளவு நம்பிக்கை வந்தது.. அவர் மீது இதற்கு முன்பு எங்காவது குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கிறதா என்று தேடி பார்த்தனர்.. அப்படி எதுவுமே இல்லை.

வெளிநாடு
இறுதியில் சுனில் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்தனர்.. இப்போது போலீசாரின் பார்வை சவுமியா பக்கம் திரும்பியது.. சவுமியாவை விசாரிக்க தொடங்கினர்... சவுமியாவின் செல்போனையும் டிரேஸ் செய்தனர்.. அப்போதுதான், சவுமியா அடிக்கடி வெளிநாட்டுக்கு போன் செய்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்தனர்.. அது வினோத் என்பதையும் உறுதி செய்தனர்..

கள்ளக்காதலி
பிறகு 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தபோதுதான், போதை மருந்தை பைக்கில் வைத்தது முதல் கள்ளக்காதலனை திருமணம் செய்ய போகும் விஷயம் வரை அனைத்தையும் சொன்னார். இறுதியில், போதை மருந்து சப்ளை செய்த ஷெஃபின் மற்றும் ஷானவாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்... ஆனால், கள்ளக்காதலன் வினோத்தை காணவில்லை.. அவரை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. கணவனை ஜெயிலுக்கு அனுப்பினால் நிம்மதியாக வாழலாம் என்று கணக்கு போட்ட சவுமியா, இப்போது ஜெயிலில் உள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications