கிறிஸ்துமஸ் பம்பர்! திருவனந்தபுரத்தில் விற்பனையான லாட்டரிக்கு ரூ.20 கோடி.. அதிர்ஷ்டசாலி யார்?
திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசான ரூ.20 கோடி XC 224091 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. திருவனந்தபுரத்தில் இந்த லாட்டரி டிக்கெட் விற்பனையாகியுள்ளது.
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. லாட்டரியை தமிழ்நாட்டிற்குள் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. எனினும், இந்தியாவில் கேரளா, பஞ்சாப், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு அரசு அனுமதி உள்ளது. சொல்லப்போனால், கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது.

வாரத்திற்கு ஏழு நாட்களும் அங்கு லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படும். இதுபோக, கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், பருவமழை பம்பர், ஓணம் மெகா பம்பர், பூஜா பம்பர் என பம்பர் பரிசுத்தொகை கொண்ட லாட்டரியும் விற்கப்படுகிறது. இந்த லாட்டரி சீட்டுக்களை கேரளாவுக்கு செல்லும் வெளி மாநிலத்தவர்கள் கூட வாங்குவதை பார்க்க முடிகிறது.
அதிர்ஷ்டம் யாருக்கு: கடந்த ஆண்டு ஓணம் பம்பர் பரிசுத்தொகையான ரூ.25 கோடி பரிசை தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு கிடைத்தது. அதேபோல், வடமாநில தொழிலாளர்கள் சிலரையும் கேரள லாட்டரி கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளது. கேரள அரசு விதிகளின் படி லாட்டரியில் பரிசு பெற்றவர்கள் வெளி மாநிலத்தவராக இருந்தால் கேரளாவிற்குள் லாட்டரி வாங்கியதை நிரூபித்தால் மட்டுமே பரிசுத்தொகை கிடைக்கும்.
அதிர்ஷ்டத்தை பொருத்தவரை யாருக்கு எப்போது அடிக்கும் என்பது தெரியாது. இதை நிரூபிக்கும் வகையில் கேரளா லாட்டரியில் அடிக்கடி பரிசு விழுவது பற்றிய பல சுவாரசியமான செய்திகள் வெளியாகி வருகிறது. கூலித்தொழிலாளிக்கு ஒரு கோடி பரிசு விழுந்தது. ரிக்ஷா ஒட்டுநருக்கு பல லட்சம் பரிசு விழுந்தது. லாட்டரி வாங்க காசு இல்லாமல் கடனாக வாங்கியவர்கள் கூட சில நேரங்களில் லட்சாதிபதியாகி விடுவதையும் பார்க்க முடியும்.
கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி: சரி இங்கே விஷயத்திற்கு வரலாம். கேரளவில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று நடைபெற்றது. 400 ரூபாய் விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டுகள் மொத்தம் 50 லட்சம் அச்சடிக்கப்பட்டன. அவற்றில் 45 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது. நேற்று மதியம் நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசு ரூ.20 கோடி XC 224091 என்ற லாட்டரி டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
பாலக்காட்டை சேர்ந்த ஷாஜகான் என்ற ஏஜெண்ட்டிடம் இருந்த இந்த டிக்கெட்டை திருவனந்தபுரத்தில் உள்ள துரைராஜ் என்ற சப் ஏஜெண்ட் வாங்கி விற்றுள்ளார். பரிசுத்தொகைக்கான லாட்டரி எண் வெளியாகி ஒருநாள் ஆகிவிட்ட போதிலும் ரூ. 20 கோடி அடித்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியவில்லை. தனது கடையில் இருந்து வெளிமாநில சுற்றூலா பயணிகள் பலரும் லாட்டரி சீட்டுக்களை வாங்கியதாக துரை ராஜ் கூறினார்.
35 ஆண்டுகளில் முதல் முறை: இதனால் தமிழ்நாடு உள்பட வெளி மாநிலத்தை சேர்ந்த யாருக்காவது பரிசுத்தொகை விழுந்துள்ளதா? அல்லது கேரள சேட்டன்களுக்கே பரிசுத்தொகை விழுந்ததா என இன்னும் தெரியவில்லை. 20 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்று அறிய கேரள மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.
லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வரும் துரை ராஜ் கூறுகையில், 35 ஆண்டுகளில் முதல் முறையாக தனது கடையில் விற்ற லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை விழுந்து இருப்பதாக மகிழ்ச்சி பொங்க கூறினார். துரைராஜ்க்கு கமிஷன் தொகையாக ரூ.2 கோடி வரை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இரண்டாம் பரிசு: இரண்டாவது பரிசாக 20 கோடி பேருக்கு தலா 1 கோடி விழுந்துள்ளது. இரண்டாவது பரிசு அடித்த லாட்டரி டிக்கெட் எண்ணின் விவரம்:
XA 324784, XA 465294, XB 279240, XB 311505, XB 378872 , XC 483413, XD 314511, XD 444440 , XE 243120, XE 319044, XE 398549 , XE 409265 , XG 307789 , XH 316100 , XH 388696, XJ 103824, XK 105413, XK 424481, XL 379420, XL 421156.












Click it and Unblock the Notifications