கேரள லாட்டரி: சட்டென வந்த மாற்றம்.. அரசின் திடீர் முடிவால்! குழம்பி தவிக்கும் சேட்டன்கள்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள லாட்டரி டிக்கெட்டுகளில் அதன் பின்பக்கம் ஏஜென்சியின் முத்திரை அச்சிடப்பட்டு இருக்கும். லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் சேட்டன்கள் இந்த முத்திரை இருக்கிறதா? என உறுதி செய்தே வாங்குவார்கள். தற்போது இந்த முத்திரை விவகாரத்தில் மேஜர் மாற்றத்தை கேரள லாட்டரி துறை கொண்டு வந்துள்ளது. இதனால், லாட்டரியை வாங்கவே பலரும் தயக்கம் காட்டுகிறார்களாம்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிகள் ரொம்பவே பிரபலமானது. டீக்கடைகளை திரும்பும் இடமெல்லாம் எப்படி பார்க்க முடியுமோ அதைப் போலவே பார்க்கும் இடமெல்லாம் லாட்டரி கடைகள் தென்படும் அளவுக்கு அங்கு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. கேரள அரசே லாட்டரி விற்பனையை நடத்துகிறது. அந்த மாநிலத்தின் வருவாயில் பெரும் பங்கு லாட்டரி மூலமாக அரசுக்கு கிடைக்கிறது.

Kerala Lottery Lottery Prize

கேரள லாட்டரி

கேரளாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பம்பர் டிக்கெட்டுகள் ஆண்டுக்கு ஆறு முறை விற்பனை செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசுக்கு மட்டும் ரூ.25 கோடி பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. பம்பர் லாட்டரிகள் மட்டும் இன்றி அங்கு தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெறும். ரூ.40விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வழங்கப்படும்.

கேரள லாட்டரி டிக்கெட்டுகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் எப்போதாவது பரிசு அடிப்பதால், எல்லையோர மாவட்டங்களில் இருப்பவர்களும் லாட்டரி வாங்குவதை பார்க்க முடிகிறது. கேரள லாட்டரி டிக்கெட்டுகளை பொறுத்தவரை டிக்கெட்டின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக அதில் கியூ ஆர் கோடு வசதி உள்ளது. டிக்கெட் உண்மையானதுதானா என்பதை லாட்டரி துறையின் கேரள பாக்யம் செயலி வாயிலாக உறுதி செய்து கொள்ள முடியும்.

சீல் அச்சிட தேவை இல்லை

இது ஒருபக்கம் இருக்க, லாட்டரி டிக்கெட்டுகளில் சிறிய மாற்றத்தை கேரள அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது, லாட்டரி டிக்கெட்டுகளுக்கு பின்புறம் ஏஜென்சியின் சீல் அச்சிடப்பட்டு இருக்கும். தற்போது சீல் அச்சிடாமல் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கடைகளில் சீல் அச்சிடாமல் உள்ள டிக்கெட்டுகளை வாங்க லாட்டரி பிரியர்கள் தயங்குகிறார்களாம்.

ஏனெனில் சீல் இல்லை என்றால் அது போலி டிக்கெட்டாக இருக்கும் என்ற அச்சம் லாட்டரி வாங்குபவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி டிக்கெட்டுகளில் சீல் அச்சடித்தே டிக்கெட் ஏஜென்சிகள் அச்சடித்து கொடுக்கிறார்களாம். டிக்கெட்டுகள் சீல் இல்லையென்றாலும் அவற்றை வாங்கலாம் என்பது பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் லாட்டரி விற்பனையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சீல் வைக்கும் முடிவை கைவிட்டது ஏன்?

லாட்டரி டிக்கெட்டுகளுக்கு பின்னால் சீல் அச்சிடுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் இந்த நடைமுறையை கைவிட லாட்டரி துறை முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான டிக்கெட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டியிருப்பதால் இதனால் தேவையில்லாத கால விரயம் ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி சீலில் உள்ள மையால் லாட்டரி டிக்கெட்டுகள் சேதம் அடைகின்றன. இதன் காரணமாகவே சீல் (முத்திரை) அச்சிடும் முறையை கைவிட கேரள லாட்டரி துறை முடிவு செய்துள்ளது.

கேரளாவில் தற்போது சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. ரூ.10 கோடி முதல் பரிசாக கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். இந்த டிக்கெட்டின் குலுக்கல் வரும் 02.04.205 அன்று நடைபெறுகிறது. கேரள லாட்டரி டிக்கெட்டுகளை லாட்டரிக்கு அனுமதி இல்லாத தமிழ்நாடு போன்ற இடங்களில் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும். கள்ளச்சந்தையில் வாங்கும் லாட்டரிக்கு பரிசுத்தொகையும் கிடைக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+