சேட்டன்களுக்கு அடிக்கும் யோகம்.. இனி தினமும் ஒருத்தர் கோடீஸ்வர் ஆக போறாரு.. கேரளா அரசின் பிளான்
திருவனந்தபுரம்: கேரளாவில் தினந்தோறும் விற்பனை செய்யப்பட்டு வரும் லாட்டரியின் பரிசுத்தொகையை அதிகரிக்க லாட்டரித்துறை முடிவு செய்துள்ளதாம். இதனால், இனி தினமும் ஒருத்தர் கோடீஸ்வரர் ஆக முடியும்.
இந்தியாவில் கேரளா, நாகாலாந்து, பஞ்சாப் உளிட்ட மாநிலங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவில் மாநில அரசே லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு என்று ஒரு பழமொழி சொல்வார்கள்... அதேபோலத்தான்.. லாட்டரி சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனவர் உண்டு.

கடனுக்கு வாங்கிய லாட்டரி பரிசு விழுந்து பல கோடிக்கு அதிபதியான அதிர்ஷ்டசாலிகள் பற்றிய சுவாரசிய செய்திகளை அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம். லாட்டரியை பொறுத்தவரை அதில் பரிசு அடித்த கோடிகளை அள்ளியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், லாட்டரியால் வீழ்ந்த பல குடும்பங்களை காண முடியும். அதனால்தான் தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.
தினமும் ஒரு கோடி பரிசு: ஏழை பாமர மக்களின் நலன் கருதி பல மாநிலங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு தடை உள்ளது. லாட்டரியால் வாழ்வு பெற்றவர்களை பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டவர்கள் பலரும் உள்ளார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இதெல்லாம் இருந்தாலும் நமக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதா.. ஒரே நாளில் பணக்காரர் ஆகிவிட மாட்டோமா என்று பகல் கனவு காணும் பலரும் லாட்டரியை விரும்பி வாங்குவதை பார்க்க முடிகிறது.
அதிலும் கேரளாவில் லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. டீக்கடை இருக்கிறதோ இல்லையோ லாட்டரி கடை இல்லாத சிறிய டவுன்களை கூட பார்க்க முடியாது என்ற அளவுக்கு அங்கு லாட்டரி கடைகள் அதிகம் இருக்கின்றன. கேரளாவில், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், ஓணம் பம்பர் என ஆறு வகையான பம்பர் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகபட்சமாக ஓணம் பம்பர் டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைக்கும்.
டிக்கெட் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: பம்பர் பரிசு டிக்கெட்டுகள் போக தினமும் கேரளாவில் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறும். இதில் புதன்கிழமை விற்பனை செய்யப்படும் ஃபிப்டி ஃபிப்டி டிக்கெட்டிற்கு மட்டுமே ரூ.1 கோடி பரிசுத்தொகையாகும். இதர டிக்கெட்டுகளுக்கு ரூ.75 லட்சம் முதல் பரிசாக கிடைக்கும். இந்த நிலையில் தான் தற்போது அனைத்து டிக்கெட்டுகளுக்கும் முதல் பரிசுத்தொகையை குறைந்தபட்சம் ரூ.1 கோடியாக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு லாட்டரித்துறை பரிந்துறை செய்துள்ளது.
அரசின் வருவாயை பெருக்கும் விதமாக இந்த ஆலோசனையை லாட்டரித்துறை முன்வைத்துள்ளது. அதேபோல், தற்போது பிரிண்ட் செய்யப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த பரிந்துரை வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை கேரள அரசு அப்படியே ஏற்றுக்கொண்டால் கேரளாவில் யாராவது ஒரு சேட்டன் கண்டிப்பாக கோடீஸ்வரர் ஆகிவிடுவார் என்று மகிழ்ச்சி பொங்க பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
டிக்கெட் விலையும் அதிகரிப்பு: பரிசுத்தொகை மட்டும் இல்லை டிக்கெட் விலையும் அதிகரிக்க பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது விற்பனை செய்யப்படும் டிக்கெட் விலையை ரூ.40ல் இருந்து 50 ஆக உயர்த்தவும் பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications