Kerala Lottery: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல! லாட்டரியில் 20 கோடி பரிசு அடித்தும் வாங்க முடியல! புலம்பும் முதியவர்
திருவனந்தபுரம்: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல என்ற பழமொழிக்கு இணங்க, கேரளாவில் லாட்டரியில் (Kerala Lottery) ரூ.20 கோடி பரிசு அடித்து அந்த பணத்தை வாங்க முடியாத நிலை கேரள நபருக்கு ஏற்பட்டுள்ளது. கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி குலுக்கல் நடந்து ஒரு மாதமாக முதல் பரிசு ரூ.20 கோடியை யாரும் உரிமை கோராமல் இருந்த நிலையில் தற்போது இந்த விவரம் தெரியவந்துள்ளது.
கேரளாவில் கடந்த மாதம் புத்தாண்டு கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு XC 138455 என்ற எண்ணுக்கு அடித்து. கோட்டயத்தில் விற்கப்பட்ட இந்த லாட்டரியில் முதல் பரிசு அடித்தது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

ரூ.20 கோடி முதல் பரிசு
சபரிமலை சீசன் கால கட்டத்தில் விற்பனயான டிக்கெட் என்பதால் தமிழ்நாட்டை சேர்ந்த யாருக்கேனும் பரிசு அடித்து இருக்குமோ என கேரள லாட்டரி பிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பரிசு அடித்தது யார் என்ற விவரம் குலுக்கல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் தெரியாமல் இருந்தது.
வழக்கமாக பரிசு அடித்த மறுநாள் அல்லது அதற்கு அடுத்த சில நாட்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். ரூ.20 கோடி முதல் பரிசு என்பதால், லாட்டரி வென்ற அதிர்ஷ்டசாலியை காண கேரள சேட்டன்கள் ஆர்வமுடன் தினமும் செய்திகளை பார்த்து வந்தனர். பரிசு வென்ற நபருக்கு நண்பர்கள், உறவினர்கள் தொல்லை கொடுப்பார்கள் என்பதால் ஒருவேளை ரகசியமாக பரிசை வாங்கினாரா? என்ற பேச்சும் எழுந்தது.
கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ரகசியமாக வாங்கினால் கூட பரிசு வென்றவரின் விவரம் வெளிவராதே தவிர.. பரிசு கிளைம் செய்யப்பட்டது என்ற தகவல் தெரிந்துவிடும். ஆனால், இந்த முறை ஒருமாதம் ஆகியும் பரிசுத்தொகை யாரும் உரிமை கோராததால், கள்ளச்சந்தையில் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது பரிசு வென்றவர் டிக்கெட்டை மறந்து இருக்கலாம் என்று பேச்சுகள் சேட்டன்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கேரளாவின் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை கிளப்பியுள்ளார். பரிசு விழுந்த டிக்கெட்டை தானே வாங்கியதாகவும்,
தனக்கே பரிசு தொகை வேண்டும்
விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவருக்கு நெய் பிரசாதம் அனுப்பும் போது அதே கவரில் வைத்து தெரியாமல் அனுப்பி விட்டதாகவும், அதை கூரியர் ஊழியர் எடுத்துவிட்டதாகவும், எனவே தனக்கே பரிசு தொகை வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், பரிசுத்தொகையை மறு உத்தரவு வரும் வரை வழங்கக் கூடாது என்று கூறி வரும் 27 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வார்களே அதேபோல, பரிசு அடித்த வென்ற லாட்டரியை வாங்கியிருந்து தனது பரிசு பெற முடியாமல் தவித்து போயுள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி சஜிமோன் வேதனையுடன் என்ன நடந்தது என்பதை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-
எனது பெயர், முகவரியை எழுதியுள்ளேன்
பரிசுத்தொகையை விழுந்த லாட்டரியை நான் தான் வாங்கியிருந்தேன். அந்த டிக்கெட்டில் எனது பெயர், முகவரியை எழுதியுள்ளேன். எனவே அந்த டிக்கெட்டை யாரிடமாவது கிடைத்து அவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்தினாலும், அது இறுதியில் தெரிய வரும். பரிசு விழுந்த உடனே டிக்கெட்டை கொடுப்பார்கள். ஆனால் இவ்வளவு தாமதமாக வந்தது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரியுள்ளார். 20 கோடி பரிசுத்தொகையை உரிமை ஒருவர் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சஜிமோன் தொடரந்த இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications