ஆசையாக ஷவர்மா சாப்பிட்ட இளைஞர்.. திடீரென துடிதுடித்து பலி! கேரளாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்
திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஆசையாக ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த ஷாக் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
சமீப காலமாக ஹோட்டல் உணவுகளைச் சாப்பிடுவோருக்கு திடீர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. சில உணவகங்களில் முறையாக உணவுகள் சமைக்கப்படுவதில்லை. இதுவே விபரீதத்திற்குக் காரணமாகும்.

மேலும் அசைவ உணவுகளைச் சுகாதாரமற்ற முறையில் கையாள்வதும் இதற்குக் காரணமாகும். இதனால் சாதாரண புட் பாய்சனிங் தொடங்கி உயிரிழப்பு வரை ஏற்படும் அபாயம் இருக்கிறது.
ஷாக் சம்பவம்: இதற்கிடையே அதேபோன்ற மற்றொரு ஷாக் சம்பவம் இப்போது நடந்துள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஆசையாக ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த இளைஞர் ஷவர்மா சாப்பிட்ட பிறகு அவருக்கு திடீரென புட் பாய்சனிங் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் திடீரென அந்த 22 வயது இளைஞர் நேற்று புதன்கிழமை உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது..
என்ன நடந்தது: உயிரிழந்த அந்த நபர் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள டீகோய் என்ற பகுதியில் வசித்து வந்த ராகுல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் ஷவர்மா ஆர்டர் செய்துள்ளார். ஷவர்மா சாப்பிட்ட பிறகு அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அவருக்குப் புட் பாய்சனிங் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் அவர் நேற்று காலமானார்.
உணவகம் மூடல்: அந்த இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவேலிபுரத்தில் உள்ள அந்த உணவகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ள திருக்காக்கரை போலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே நகராட்சி அதிகாரிகளும் அந்த ஹோட்டலை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடி சீல் வைத்துவிட்டனர்.

ராகுலின் உடல் இப்போது பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகே உயிரிழப்பிற்கு ஷவர்மா காரணமா அல்லது வேறு எதாவது காரணமா என்பது தெரிய வரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பிரேதப் பரிசோதனை முடிவு கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷவர்மா: ஷவர்மா என்பது நமது நாட்டை சேர்ந்த உணவே இல்லை. அது மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக இருக்கும் உணவாகும். இப்போது நமது நாட்டில் குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களில் ஷவர்மாவுக்கு மவுசு அதிகம். அதேநேரம் இந்த அடிக்கடி இதுபோன்ற உயிரிழப்பால் சர்ச்சையில் சிக்குவதும் ஷவர்மா தான். தமிழ்நாட்டில் சிறுமி உயிரிழந்ததால் ஷவர்மாவுக்கு சில காலம் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்ன பிரச்சினை: ஷவர்மா என்று இல்லை.. எந்தவொரு அசைவ உணவாக இருந்தாலும் நன்கு சமைக்க வேண்டும். இல்லையென்றால் அதான் மோசமான விளைவுகள் ஏற்படுத்தும் . ஆபத்துகள் ரொம்பவே அதிகம். இதில் ஷவர்மா ஏன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறது என்றால் மற்ற அசைவ உணவுகளில் நாம் அதை நன்கு சமைத்துவிடுவோம். ஆனால் ஷவர்மாவில் அது அந்த ஷவர்மா ஸ்டாண்டில் இருக்கும் நெருப்பு சூட்டில் மட்டுமே வேகும்.
மற்றபடி அது எங்கும் வேக வாய்ப்பே இல்லை. இதன் காரணமாகவே பல நேரங்களில் ஷவர்மாவில் இருக்கும் சிக்கன் சரியாக வேகாமல் போகிறது. முறையாகச் சமைத்துச் சாப்பிட்டால் எதிலும் ஆபத்து இல்லை. முறையாகச் சமைக்கப்படவில்லை என்றால் தான் பிரச்சினை.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications